கதறி அழும் வெண்பா.. ஷர்மிளா எடுக்கப்போகும் முடிவு.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா சக்தி என ஒரு குழந்தை அட்மிட் ஆனாலே எங்கே இருக்கிறாள் என்னாச்சு என கேட்க நர்ஸ் ஒருவர் அந்த பொண்ணு ரொம்ப துருதுருன்னு இருக்கா.. ஆனா பாவம் இதயத்தில் பிரச்சனை ஒரு வாரத்தில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து அதனால் நேத்து டாக்டர்கள் மீட்டிங் போட்டு எல்லா ஹாஸ்பிட்டலுக்கு டோனர் கேட்டு மெசேஜ் அனுப்பி உள்ளனர். பாவம் அந்த குழந்தைக்கு அற்ப ஆயுசு என சொல்ல கண்ணம்மா எதுக்கு அப்படி சொல்றீங்க அது தான் சரி பண்ணிடலாம் நீ சொல்லி இருக்காங்களே அவங்க பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க என கூற நர்ஸ் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

பிறகு கண்ணம்மா அந்த குழந்தையை பார்த்து பேசி குழந்தையோடு விளையாடுகிறார். அதன் பின்னர் மருத்துவமனையில் ஒருவர் புட் ரிவியூ செய்ய இதை பார்த்த பாரதி என்ன ஹாஸ்பிடல்ல இல்ல வேற ஏதாவது தான் என ஒரு டாக்டரிடம் கூறுகிறார். அந்த டாக்டர் இதையெல்லாம் பார்க்க கடுப்பா இருக்கு எல்லாம் புதுசா போட்டோ எடுக்க அட்மின் பண்ற வேலை. ஒரு மண்ணும் தெரியாது அவன அட்மினாக போட்டு நம்ம உயிரை வாங்குறாங்க என கூறுகிறார். இனிமே இந்த மாதிரி சூட்டிங்க் ஏதாவது பண்ண கேமராவை சீஸ் பண்ணுங்க, யாராச்சும் கேட்டா பாரதி தான் இப்படி சொன்னார் என சொல்லுங்க விக்ரம் அங்கிள் கிட்ட நான் பேசிக்கிறேன் என கூறுகிறார்.

அதுமட்டுமல்லாமல் கண்ணம்மாவை அழைத்து பாரதி இதெல்லாம் உன் வேலையா என சத்தம் போடுகிறார். கண்ணம்மா அவரு நேரா விக்ரம் சார் கிட்ட பர்மிஷன் வாங்கி இருக்கிறார் என சொல்ல முயற்சி செய்தும் அதை சொல்ல விடாமல் திட்டி தீர்த்து விட்டு சென்று விடுகிறார் பாரதி.

இந்தப் பக்கம் சௌந்தர்யா, வேணு மற்றும் விக்ரம் ஆகியோர் பாரதி கண்ணம்மா பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் கண்ணம்மா மீதான கண்ணோட்டம் பாரதிக்கு மாறும் எல்லாமே நல்லதாக நடக்கும் என கூறுகிறார்.

இந்த பக்கம் வெண்பா அழுது புலம்பிக் கொண்டே இருக்கிறார். இவ்வளவு நாளாக முட்டாளாக இருந்து இருக்கேன் என புலம்புகிறார். என்னுடைய லவ் அன்பு எதுவுமே உனக்கு புரியலையா பாரதி என்னையே ஐ ஹேட் யூ ன்னு சொல்ல வச்சுட்ட என அழுது கொண்டிருக்க அப்போ சாந்தி என்னாச்சு என கேட்க பாரதியைப் பார்த்து கேள்வி கேட்டு விட்டு ஐ ஹேட் யூ-னு சொல்லிட்டேன் என கூறுகிறார். இதைக் கேட்ட ஷர்மிளா கைதட்டி வெரிகுட் என சொல்ல வெண்பா அதிர்ச்சியாகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 04.05.22
jothika lakshu

Recent Posts

காதலி மனைவியானாள்… மனைவி மர்மமான முறையில் கொலையானாள் – கணவனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ‘கருப்பட்டி’

காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன்…

11 hours ago

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி: கொல்கத்தாவில் தொடங்கிய படப்பிடிப்பு!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்…

11 hours ago

‘தட்டிவிடாமல் என்னை தட்டிக் கொடுங்கள்’ – தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதில்!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது…

12 hours ago

இணையத்தில் கசிந்த ‘ராமாயணம்’ டிரைலர் – அதிர்ச்சியில் படக்குழு

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…

12 hours ago

ஜி.வி.பிரகாஷின் ‘இம்மார்டல்’ – இன்று வெளியாகும் 2-வது சிங்கிள்!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘இம்மார்டல்’. இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘She…

13 hours ago

இன்று மாலை வெளியாகும் மகுடம் படத்தின் ‘கலங்காதே’ பாடல்!

நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. ‘மகுடம்’ படத்திற்கு…

13 hours ago