ஹேமாவின் ஸ்கூலுக்கு சென்றார் பாரதி வெண்பா.. கண்ணம்மாவிடம் பல்பு வாங்கிய வெண்பா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஸ்கூலில் ஹேமாவும் லட்சுமியின் சந்தித்துக் கொண்ட நிலையில் அம்மா சமையல் அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்களா அப்பா வரலைன்னு என கேட்கிறார். அதெல்லாம் இல்ல அவங்க நல்லா தான் இருக்காங்க ஸ்கூல்ல எல்லாருக்கும் கொடுக்கச் சொல்லிக் கொடுத்துவிட்டு இருக்காங்க என சொல்கிறார். பிறகு அந்த வழியாக வந்த வாட்ச்மேன், அட்டெண்டர் என இருவருக்கும் கேட் கொடுக்கிறார் லட்சுமி. அதன்பிறகு அங்கிருந்து இருவரும் கிளம்ப இவர்கள் இருவரும் லட்சுமிக்கு அப்பா இல்லாத விஷயம் பற்றி பேச ஹேமா அவர்களிடம் சென்று சண்டையிடுகிறார். இதனால் லட்சுமி எப்படியாவது அப்பாவைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

இந்த பக்கம் மருத்துவமனையில் பாரதி சாப்பிட்ட கையோடு யோசனையில் இருக்க அந்த நேரத்தில் வந்த வெண்பா என்னடா யோசனையில் இருக்க எனக் கேட்க ஹேமா பற்றி யோசிச்சிட்டு இருக்கேன் என கூறுகிறார். ஹேமா கல்யாணம் குறித்து சொன்னதைத்தான் பாரதி யோசித்துக் கொண்டிருக்கிறார். இது நேரத்தில் ஹேமா எப்படி படிக்கிறான் நீ ஸ்கூலுக்கு போய் இருக்கிறாயா இல்லையா என வெண்பா கேட்கிறார். இப்ப போய் விசாரிச்சு எதுக்கு அவளுக்கு பிரஷர் கொடுக்கணும் அவ படிக்கிறது படிக்கட்டும் என பதில் சொல்ல மத்த பேரன்ட்ஸ் எல்லாம் இப்படியா இருக்காங்க, போயிட்டு அடிக்கடி ஹேமா எப்படி படிக்கிறான் விசாரிக்கணும் என வெண்பா கூறுகிறார். என்ன திடீர்னு அம்மா மேல உனக்கு அக்கறை என பாரதி கேட்க எனக்கும் அவ மேல அக்கறை இருக்காதா என்ன என வெண்பா கூறுகிறார்.

பிறகு சரி வா நாம ஸ்கூலுக்கு போயிட்டு ஹேமா பற்றி விசாரித்து விட்டு வரலாம் என கூட்டிக்கொண்டு செல்கிறார். இங்கு லட்சுமி ஏதோ யோசனையில் இருக்க அப்போது அங்கு கண்ணம்மா வருகிறார். என்ன யோசனையில் இருக்க என கேட்க அப்பா உன்ன விட்டுட்டு போய்ட்டாரா? வேற கல்யாணம் பண்ணிக்க நேரா புது அம்மா எப்படி இருப்பாங்க எங்க இருக்காங்க என கேள்வி மேல் கேள்வி கேட்க கண்ணம்மா நீ தான் அப்பா பத்தி கேக்க மாட்டேன்னு சொன்னியே என கூறுகிறார். இந்த ஒரு முறை மட்டும் சொல்லும்மா என கேட்கிறார். அப்பா வேற கல்யாணம் எல்லாம் பண்ணிக்கல என கண்ணம்மா கூறுகிறார்.

இந்த பக்கம் பிரின்ஸ்பல் ரூமில் பாரதியும் வெண்பாவும் ஹேமா பற்றி விசாரித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நேரத்தில் லட்சுமி கண்ணம்மா உடன் உள்ளே வருகிறார். எங்க அம்மாவுக்கு பிறந்தநாள் என கொடுக்கிறார். இந்த நேரத்தில் வெண்பா சரி ஹேமா எப்படி படிக்கிறானு சொல்லுங்க என கேட்கிறார். ஹேமாவுக்கு என்ன சூப்பரா படிக்கிறா என கூறுகிறார். அதன் பின்னர் லட்சுமியின் நீங்கதான படிக்க வைக்கிறீங்க அவளும் சூப்பரா படிக்கிறா என கூறுகிறார்.

லட்சுமி நீ நல்லா படிக்கணும் உனக்கு என்ன ஆகணும்னு ஆசை என பிரின்ஸிபள் கேட்க ஹேமா அவளுக்கு கலெக்டர் ஆகணும்னு ஆசை என கூறுகிறார். கலெக்டர் ஆகி எங்க அம்மாவை சைரன் வைத்த வண்டியில ஒரு ரவுண்டு கூட்டிட்டு போகணும் என லட்சுமி கூறுகிறார்.

அதன் பிறகு ஹேமாவிடம் உனக்கு என்ன ஆகணும்னு ஆசை என கேட்க அவளுக்கு பைலட் ஆகணும்னு ஆசை என லட்சுமி சொல்கிறார். என்ன உன்ன கேட்டா ஹேமா பதில் சொல்ற ஹேமாவை கேட்டா நீ பதில் சொல்ற என பிரின்சிபல் கேட்க அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா பிறந்த அக்கா தங்கச்சிங்க மாதிரி என கண்ணம்மா கூறுகிறார். ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க என கூறுகிறார். லட்சுமி இந்த ஸ்கூல்ல படிக்க காரணம் டாக்டர் தான். பெத்த பொண்ணு மாதிரி படிக்கவைக்கிறார். அவர் மட்டும் இல்லனா லட்சுமி எந்த ஸ்கூல்ல படிக்க வச்சி இருக்க முடியுமா என கூறுகிறார் கண்ணம்மா.

பிறகு வெண்பா நாங்க வார வாரம் வந்து எப்படி படிக்கிறானு விசாரிக்கிறோம் என கூறுகிறார். உடனே கண்ணம்மா ஹேமா நான் பெத்த பொண்ணு மாதிரி இவங்களுக்கு எதுக்கு அலைச்சல், ரெண்டு பேருமே டாக்டர், இரண்டு பேரும் பிசியா இருப்பாங்க. ஹேமாவை நான் பார்த்துக்கிறேன் என சொல்ல பிரின்சிபல் சாரும் ஹேமாவை அம்மா மாதிரி பார்த்துக்க இவங்க இருக்காங்களே. எதுவாக இருந்தாலும் அவங்க கிட்ட சொல்றேன் இவங்க உங்ககிட்ட சொல்லிடுவாங்க உங்களுக்கு எதுக்கு அலைச்சல் என கூறுகிறார். மேலும் வெண்பா டாக்டர் சாருக்கு தங்கச்சி மாதிரி என கண்ணம்மா கூற அவர் அதிர்ச்சியாகிறார்.

பிறகு வெளியே போன வெண்பா பாரதியிடம் கண்ணம்மா பற்றி கொளுத்திப் போடுகிறார். உங்க வீட்ல இருக்க எல்லாரையும் அவள் பக்கம் இழுத்தாள் இப்போ ஹேமாவை நினைத்து பார்க்கிறார். ஹேமா மேல அவளுக்கு என்ன திடீர் அக்கறை என சொல்ல யாருக்கு கண்ணம்மாவுக்கு திடீர் அக்கறையா? தேவையில்லாம பேசாதே அவ ஆரம்பத்திலிருந்தே ஹேமா மேல பாசமாக தான் இருக்கா. உனக்குதான் திடீர் அக்கறை, நீ சொன்ன இல்ல இங்க வந்து அசிங்கப்பட்டது தான் மிச்சம். கிளம்பலாம் என பாரதி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்‌. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 01.03.22
jothika lakshu

Recent Posts

விஜி சொன்ன வார்த்தை, சூர்யா எடுத்த முடிவு,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

11 minutes ago

கிஸ் : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…

3 hours ago

முத்து,மீனா சொன்ன வார்த்தை.. விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…

4 hours ago

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

18 hours ago

ரோபோ ஷங்கர் குறித்து எமோஷனலாக பதிவை வெளியிட்ட இந்திரஜா.!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…

18 hours ago

கண் முழித்த நந்தினி, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago