சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, பரமு சதியில் சிக்க போவது யார்? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யாவும் அருணாச்சலமும் பேசிக்கொண்டிருக்க சுரேகா அம்மா உங்கள கூப்பிட்டாங்க மாமா ஏதும் முக்கியமான விஷயம் பேசணுமா என்று சொல்லுகிறார். அவர்களும் வர அப்போது சுந்தரவல்லி என் அண்ணன் அவரது மகனுக்கு இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் நடக்கணும் என்று ஜோசியர் சொன்னதாக சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி இன்னும் மூணு மாசத்துல எப்படி பொண்ணு பார்த்து கல்யாணத்தை முடிக்க முடியும் என்று சொல்ல அருணாச்சலம் விடுங்க சீக்கிரம் பார்த்துடலாம் என்று சொல்ல உடனே சுந்தரவல்லி என் கையிலே பொண்ண வச்சுக்கிட்டு நம்ம எதுக்கு தேடணும் என்று கேட்கிறார். நான் ஒரு முடிவோட தான் இங்கு வந்து இருக்கேன் இங்கேயே தங்கி கல்யாணத்தை முடிச்சிட்டு என் மருமக சுரேகாவ அழைச்சிட்டு தான் அமெரிக்காவுக்கு போக போறேன் என்று சொல்ல அருணாச்சலமும் சூர்யாவும் அவ இன்னும் படிக்கட்டும் என்று சொல்லுகிறார். அவ காலேஜ் முடிக்கப் போறா அவ்வளவுதானே என்று சொல்லிவிட்டு கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்க சூர்யா அவங்க திடீர்னு வந்து உட்கார்ந்து பொண்ணு கேக்குறாங்க பேசி பழகாமல் எப்படி கொடுக்க முடியும் என்று கேட்கிறார். ஆயிரம் தான் இருந்தாலும் அவ என் தங்கச்சி நான் பார்த்துதான் கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சொல்லுகிறார். ரஞ்சித் நம்மளோட கசின் தான் அவனோட போனை எப்படி சுரேகாவோட குணம் எப்படின்னு தெரிஞ்சுட்டு தானே கல்யாணம் பண்ணனும் அப்பதானே அவங்களோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் என்று சொல்லுகிறார்.

உடனே சுந்தரவல்லி என் பையனா இது பேசுறது உன் கல்யாணத்துல நீ யோசித்து இருக்கணும் என்று சொல்ல ரஞ்சித் சூர்யா சொல்றதும் சரிதான் முன்ன பின்ன தெரியாம என்னிடம் பழகாமல் எப்படி பொண்ணு கொடுத்து வசிப்பாங்க என்று சொல்ல நீ என்ன அண்ணனோட பையன் அது போதாதா என்று கேட்கிறார். சூர்யா சொல்றது சரிதான் என்று ரஞ்சித் சொல்ல உடனே சூர்யா பேச வர என் பொண்ணுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் எங்கேயோ ரோட்ல போறவளே தாலி கட்டுனவன் பேசுவதெல்லாம் என்னால கேட்டுகிட்டு இருக்க முடியாது. அந்தக் கல்யாணத்துல எனக்கு முழு சம்மதம் இதுக்கு மேல எந்த விஷயமும் பேசாம கல்யாணத்துக்கான வேலையை ஆரம்பிச்சிடலாம் என்று சொல்ல, என்ன டாடி சுரேகா கிட்டயாவது ஒரு வார்த்தை கேட்கலால்ல என்று சொல்ல அருணாச்சலம் நீ சொல்றதும் சரிதான் என்று சுரேகாவிடம் இந்தக் கல்யாணத்துல உனக்கு விருப்பமா என்று கேட்க, எனக்கு எல்லாமே என் அம்மா தான் அவங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன் அவங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் என்றால் எனக்கும் விருப்பம் தான் என்று சொல்ல, எல்லா விஷயத்தையும் நம்பதா என்று சொன்ன சுந்தரவல்லி அவ என் பொண்ணு அவளுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் அடுத்து ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடு பண்ணிடலாம் என்று சொல்லுகிறார். என் பையன பத்தி நான் உன்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் என்று கேட்க, நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் என சுந்தரவல்லி சொல்ல உனக்காக இல்லனாலும் மத்தவங்களுக்காக சொல்லணும் என்று சொல்லுகிறார். என் பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது குடும்பத்தை ரொம்ப நல்லா பார்த்துப்பான் என்று சொல்ல யார் என்ன சொன்னாலும் ரஞ்சித்த பத்தி நான் தேடிட்டு தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சூர்யா கீழே வந்து டென்ஷன் ஆக உட்கார நந்தினி சாப்பிட கூப்பிடுகிறார். அப்போது அவர்கள் பொண்ணு கேட்ட விஷயத்தை சொல்ல நந்தினி நல்ல விஷயம் தானே என்று சந்தோஷப்படுகிறார்.

ரஞ்சித் சாரை பார்த்தா எந்த பழக்கமும் இல்லாத மாதிரி தெரியுறாரு என்று சொன்ன உலகத்துல இருக்குற யாரா இருந்தாலும் அவங்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கும் யாரையும் அப்படி வைக்க முடிவு பண்ண முடியாது என்று சொல்லுகிறார். உடனே இனிமே பொட்டி தூக்குற வேலை செய்யாத என்று சொல்லிக் கொண்டிருக்க நான் போய் தோசை ஊத்துறேன் என்று சொல்லி நைசாக சென்று விடுகிறார். மறுநாள் காலையில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க சுந்தரவல்லி அண்ணன் சூர்யாவை கூப்பிட்டு நேத்து நீ சொன்ன விஷயத்தை பத்தி யோசிச்ச சூர்யா நீ சொல்றதும் கரெக்ட் தான் மூணு மாசம் இங்கதான் இருக்க போறோம் சூர்யாவும் ரஞ்சித்தும் பழகட்டும் அவங்க மனசு ஒத்து போனதுக்கு அப்புறம் கல்யாணத்தை பண்ணவும் என்று சொன்ன சூர்யாவும் இதை தான் எதிர்பார்த்தோம் என்று சொல்லுகிறார். உடனே அவன்கிட்ட எதுக்கு இவ்வளவு இறங்கி பேசிகிட்டு இருக்கீங்க என்னோட சம்மதம் இருந்தா போதாதா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து மாதவி இடம் சமையல் ரெடி ஆயிடுச்சு பாத்துட்டு வா என்று சொல்ல மாதவிக்கு வந்து இன்னும் ரெடி ஆகலையா என்று கேட்ட இன்னும் பத்து நிமிஷத்துல ரெடியாயிடும் என்று நந்தினி சொல்லுகிறார். வந்தவங்க பசியோட இருப்பாங்களா என்று சொல்லிக் கொண்டே இருக்க பரமு போனில் அங்கு நடக்கும் விஷயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். சரி நான் வேணும்னா பழத்தை கட் பண்ணி எடுத்துட்டு வரேன் என்று சொல்ல பரமு அதைக் கேட்டு சந்தோசப்படுகிறார். நீ மறச்சு வச்ச கேமரா எவ்வளவு பளிச்சென்று காட்டுது பாரு என்று சொல்லி காட்டுகிறார் அவன் என்ன நறுக்குறான் உனக்கு தெரியுதா என்று சொன்ன இவர்கள் வாங்கிக் கொண்டு வந்த ஆப்பிளை கட் பண்ணுகிறார்.

கண்டிப்பா ஒரு உயிர் போகப் போகிறது என்று பரமு சந்தோஷப்பட, கல்யாணம் ஆப்பிளை கட் பண்ணி எடுத்துச் செல்ல, அவங்க துடி துடிச்சு சாகுறது நேர்ல பார்க்க முடியாதா என்று சொல்ல நம்மளுக்கு தேவை அவங்க வீட்ல ஒருத்தர் சாகணும் அத பாத்தா என்ன பாக்கலனா என்ன என்று சொல்லுகிறார். கல்யாணம் ஆப்பிள் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க சாப்பிடற நேரத்துல எதுக்கு என்று சுந்தரவள்ளியின் அண்ணன் மகள் கோபப்படுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு ரெடி ஆய்டும் நீ ஆப்பிள் எடுத்துக்கோ என்று சுந்தரவல்லி சொல்ல, ஹரிதாவும் ஒரு ஆப்பிளை எடுத்து சாப்பிட போக சூர்யாவும் ஒரு ஆப்பிள் பீஸ் எடுக்க உடனே அந்த ஆப்பிளை வைத்து விடுகிறார் என்ன ஆச்சு ஹரிதா என்று கேட்க என்ன பொறுத்த வரைக்கும் கல்யாணத்துக்கும் சூர்யாவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது என்று சொல்லுகிறார். என்னைக்கு சூர்யா அந்த நந்தினியை கல்யாணம் பண்ணானோ அப்பவே நம்ம வீட்டு கேட்டகரிலிருந்து அவன் கீழே இறங்கிட்டான் அப்புறம் அவன் கை வச்ச தட்டிலிருந்து நான் எப்படி எடுத்து சாப்பிட முடியும் என்று சொல்ல சூர்யா மிரட்ட வர அருணாச்சலம் அமைதியாக இருக்கச் சொல்லுகிறார் கெஸ்டா இருந்தா கெஸ்ட்டா மட்டும் இருக்கணும் கோஸ்டா இருக்க கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். நானே போய் டீல் பண்ணிக்கிறேன் என்று சூர்யாவுடன் கீழே வந்து ஹரிதா பேசுகிறார். நீ ஏன் இவ்வளவு சீப்பா நடந்துக்கிற மத்தவங்க வேண்டுமென்றால் என்கிட்ட கேள்வி கேட்க பயப்படலாம் ஆனால் நான் கேள்வி கேட்க தான் செய்வேன் என்று சொல்ல குடும்பத்தினர் அனைவரும் வந்து விடுகின்றனர்.

போயும் போயும் நீ அந்த நந்தினியை கல்யாணம் பண்ணி இருக்க, லவ் கூட பண்ணாம திடீர்னு தாலி கட்டிட்ட என்று சொன்னாங்க எதுக்கு இப்படி கேனத்தனமாக இறங்கி போன என்று கேட்கிறார். மத்தவங்க பர்சனல் இல்ல இன்வால் ஆகாத என்று சொல்ல, நீ பண்ண கல்யாணத்துல அவங்க எவ்வளவு மனசு கஷ்டப்பட்டு இருக்காங்க தெரியுமா? நீ பண்ண வேலையா அவங்க அசிங்கப்பட்டுக்கிட்டு இருக்காங்க சொல்லு சரியா அவங்க மனசு எவ்வளவு பாடுபடும் என்று கேட்கிறார். இதுதான் உன்னோடு லிமிட் கல்யாணம் பண்ணி நான் யார் கூட வாழனும் என்கிறதால் நான் தான் டிசைட் பண்ணனும். என்ன பொறுத்த வரைக்கும் நந்தினி தான் ஃபர்ஸ்ட் கிளாஸ் இவ்வளவு பணமும் வசதியும் என் நந்தினி ஓட நிழலுக்கு வராது என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான புரோமோவில் சூர்யா நந்தினி இடம் அவளுக்காக எல்லாம் தூக்கி வச்சு பேசல நிஜமானமே நீ ஒரு ஜெம் தான் என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் நான் முடிவு பண்ணது பண்ணது தான் இதுல யாரும் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று சொல்ல மறுபக்கம் பரமுவின் அண்ணன் இன்னைக்கி சூர்யா உயிர் போக போகுது என்று சொன்ன மறுபக்கம் சூர்யாவும் நந்தினியும் ஆப்பிள் கையில் வைத்துக் கொண்டிருக்க நந்தினி சாப்பிட்டு விடுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


moondru mudichu serial promo update 18-02-26
moondru mudichu serial promo update 18-02-26
jothika lakshu

Recent Posts

Ala Bolelo Lyric Video

Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…

16 minutes ago

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

53 minutes ago

மொத ராத்திரி – திரை விமர்சனம்

வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…

2 hours ago

“கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…

2 hours ago

“தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு” – ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…

2 hours ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து பூரிப்படைந்த சசிகுமார்!

கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…

2 hours ago