சந்தியாவை பளாரென அறைந்த சிவகாமி.. கதறி அழுத சந்தியா.. இன்றைய ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி இரண்டும் இணைந்து ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய எபிசோடில் இரண்டாம் பாதியில் மக்களிடம் கையெழுத்து வாங்கிய சாமியார் அதை கோர்ட்டில் மேல்முறையீடு செய்கிறார். மருத்துவமனையில் இருக்கும் சந்தியாவை பார்க்க வந்த சரவணன் பார்வதியும் நடந்த விஷயத்தை சொல்ல பார்வதி இறந்து போனதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தியா கதறி அழுகிறார்.

வீட்டில் குடும்பமே உட்கார்ந்து பார்வதியை பறிகொடுத்து விட்டோம் என அழுது கொண்டிருக்க அந்த நேரத்தில் சந்தியா காரில் வந்து இறங்க வெளியே வந்த சிவகாமி உன்னால என் பொண்ண பறிகொடுத்து நிற்கிறேன் என சந்தியாவை பளாரென என அறைகிறார். சந்தியா இது எல்லாத்துக்கும் காரணம் அந்த சாமியார் தான் என திரும்பவும் சொல்ல இன்னமும் நீ உன்னுடைய ஆணவத்தை விடல என சிவகாமி சத்தம் போடுகிறார்.

நீங்க என்னதான் சொன்னாலும் இதுதான் நிஜம் இதுவரைக்கும் என்னால இந்த குடும்பத்திற்கு எந்த ஒரு கெட்ட பேரும் வந்ததில்லை இப்பவும் அப்படித்தான் கடைசியில் நான் சொன்னது உண்மை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். காணாமல் போன கண்ணம்மாவை தேடி கண்டுபிடிப்பேன் இன்னும் என் உள்மனது பதில் பார்வதி உயிரோடுதான் இருக்கிறாள் என சொல்கிறது. அவளுக்கு என்ன ஆச்சு என்பதை கண்டுபிடிப்பேன். அதுவரைக்கும் நான் இந்த வீட்டுக்குள்ள கால் எடுத்து வைக்க மாட்டேன் என சத்தியம் செய்கிறார்.

இதனையடுத்து சரவணன் மூத்த பிள்ளையா இந்த வீட்டுக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்காமல் விடமாட்டேன் அதுவரைக்கும் நானும் இந்த வீட்டுக்குள் வரமாட்டேன் என சொல்லி சந்தியாவை அழைத்துக் கொண்டு செல்கிறார். பிறகு பாரதி கண்ணம்மாவை நான் கண்டுபிடித்து கொண்டு வருகிறேன் என சொல்லி இரண்டு குழந்தைகளையும் ஆறுதல் படுத்தி விட்டு அங்கிருந்து நகர்கிறார்.

இந்த பக்கம் சாமியார் மேல்முறையீடு செய்த வழக்கு ஜெயித்து விட்டது என மக்களிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். ஊர் மக்கள் அந்த சிவகாமி குடும்பத்தை சும்மா விடக்கூடாது என சொல்ல நான் சும்மா இருந்தாலும் நீங்க சும்மா இருக்க மாட்டீங்க போல இந்த பூமி பூஜை நடந்து முடியட்டும், அதன் பிறகு அந்த குடும்பத்து மேல நானே கேஸ் கொடுக்கிறேன் என கூறுகிறார். பிறகு சாமியார் சந்தியா உன் குடும்பத்தை அழிக்காமல் விடமாட்டேன் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma and raja rani 2 serial episode
jothika lakshu

Recent Posts

VOWELS – An Atlas of Love Official Trailer Tamil

  https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI

2 days ago

Rai Rai Raa Raa Song (Tamil)

Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…

2 days ago

Leader – Official Teaser

Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU

2 days ago

Manithan Deivamagalam – Official Teaser

https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-

2 days ago

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…

2 days ago

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

2 days ago