சிவகாமி குடும்பத்தினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. கதறி அழும் குடும்பத்தினர்.. இன்றைய ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா அரை மணி நேரம் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா. இந்த இரண்டு சீரியல்களும் தற்போது மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

இன்றைய எபிசோடில் பார்வதியும் கண்ணம்மாவும் காணாமல் போனத நினைத்து ஒட்டுமொத்த குடும்பமும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பின்புறத்திலிருந்து அர்ச்சனா எல்லாரும் இங்கு ஓடி வாங்க என பதட்டத்தோடு கத்துகிறார்.

அனைவரும் ஓடி வந்து பார்த்தால் பின்புறத்தில் ஏதோ ஒரு கிப்ட் பாக்ஸ் இருப்பதை பார்த்து அனைவரும் நடுங்கிப்பாக கடைசியில் சிவகாமி நானே இதை திறக்கிறேன் யாரும் கிட்டே வர வேண்டாம் என சொல்லி அந்த வார்த்தை திறந்து பார்க்க அதில் கருகிய முடி இருப்பதை பார்த்து இது யாருடைய முடி என அழுகிறார். பிறகு பாஸ்கர் அந்த பாக்ஸில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்து இது பார்வதிக்கு நான் வாங்கி கொடுத்த மோதிரம் என கதறியழ சிவகாமி மயங்கி விடுகிறார்.

பின்னர் பார்வதிக்கு ஏதோ ஆயிடுச்சு என குடும்பத்தார் அனைவரும் கதறி துடிக்க அந்த நேரத்தில் ஆதிக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதில் ஏதோ ஒரு பெண்ணின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு இருப்பதாக செய்தி வந்திருப்பதை பார்த்து குடும்பத்தார் அனைவரும் இன்னும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு சரவணன் பாரதி மற்றும் பாஸ்கர் என மூவரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில் அங்கு திரட்டப்பட்டிருந்த பொருட்களை வைத்து இது அனைத்தும் பார்வதியோடது தான் என பாஸ்கர் கதறி அழுகிறார். கருகிய உடலை பார்த்து மூவரும் கதறி துடிக்கின்றனர்.

இந்த பக்கம் சாமியாரின் சிஷ்யன் கோர்ட்டில் கோவில் கட்ட அனுமதி வாங்க மக்களிடம் கையெழுத்து வாங்குகிறார். சிவகாமி குடும்பத்தை தவிர மற்றவர்கள் எல்லோரும் கையெழுத்து போட தயார் என ஊர் மக்கள் அனைவரும் கையெழுத்து போடுகின்றனர். இத்துடன் இன்றைய மெகா சங்கமம் எபிசோடில் அரை மணி நேரம் எபிசோட் முடிகிறது.

bharathi kannamma and raja rani 2 serial episode
jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

7 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

8 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

8 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

8 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

8 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

8 hours ago