bharathi kannamma 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. முதல் பாகம் போதும் போதும் முடியல என ரசிகர்கள் வெறுத்துப் போன நிலையில் முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து கொஞ்சம் கூட கேப் விடாமல் சீசன் 2 தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வினுஷா தேவி நாயகியாக நடித்த சிபு சூரியன் நாயகனாக நடிக்க பரீனா வில்லி பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கிய பாரதி கண்ணம்மா சீசன் 2 பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது பத்து மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா பாரதியின் அப்பா பேசிய ஆடியோ பைலை எப்எம் ரேடியோவில் இருந்து வாங்கி வந்த நிலையில் வெண்பா அதை ஆட்டைய போட்டார்.
ஆனால் அது எல்லாம் மீறி கண்ணம்மா இன்று ஸ்கூலில் பிரேயர் நடந்த போது இந்த ஆடியோ பைலை ஒளிபரப்ப அதை பார்த்து சௌந்தர்யா குடும்பம் மட்டுமே கண்ணீர் சிந்துகிறது. பாரதி தன்னுடைய அப்பாவின் பேச்சைக் கேட்டு கண் கலங்குகிறார்.
போதை பழக்கங்கள் இளைஞர்களின் வாழ்க்கையை கெடுத்து விடும் அவர்களது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய அசிங்கத்தை தேடித் தரும் என பேசியது எல்லாம் கேட்டு பாரதி கண்ணீர் சிந்துகிறார். வெண்பா என் திட்டமெல்லாம் வேஸ்டா போச்சு அந்த கண்ணம்மா பக்காவா ஸ்கோர் பண்ணிட்டா என புலம்புகிறார்.
மேலும் சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு நன்றி சொல்ல பாரதியின் கண்ணம்மா செய்த விஷயத்துக்காக நன்றி கூறி கண்கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட் முடிவடைகிறது.
பாதாம் மில்க் ஷேக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
ட்ரெண்டிங் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர்…