தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டிற்கான ஸ்டார்ட் அப் இந்தியா மேகசைன் விருதுகள் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஷால் அவர்களுக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
கையில் கோப்பையுடன் நடிகர் விஷால் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
