Categories: Health

தக்காளியை தொடர்ந்து உட்கொள்வதால் கிடைக்கும் பயன்கள்!

தக்காளிப் பழச்சாற்றிலுள்ள வலி நிவாரணத் தன்மை உடல் வலியையும் குறைக்கிறது. குறைந்தளவில் நன்கு நீரில் கலக்கப்பட்ட, இனிப்பூட்டப் பட்ட தக்காளிச்சாற்றை தொடர்ந்து குடித்துவர கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பாதையில் தோன்றும் கிருமித்தொற்று மற்றும் நச்சுக்கிருமிகள் நீங்கும்.

தக்காளியைப் பிழிந்து, விதை மற்றும் தோலை நீக்கி, வடிகட்டி, வெறும் சாற்றுடன் கற்கண்டு அல்லது சீனி கலந்து சாப்பிடுவதாலும், நன்கு பழுத்த தக்காளிப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சீனி கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதாலும் உடல் உஷ்ணம் தணியும்.

தக்காளியை சூடு செய்யாமல் வடிகட்டி அப்படியே சாப்பிடுவதால் சிறுநீர் கிருமித்தொற்று நீங்குகிறது. ஆனால் தக்காளியை தோல் மற்றும் விதையுடன் சேர்த்து உட்கொள்வதால் சிறுநீர்ப் பாதையில் சுண்ணாம்பு, யூரிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் சத்து சேகரிக்கப்பட்டு, கற்கள் உண்டாகிவிடுகின்றன.

பச்சை தக்காளிச்சாறு உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது. சர்க்கரை நோயாளிகளுக்கு தொடர்ந்து வெப்பத்தாக்குதலை நீக்க தக்காளியை அடிக்கடி உட்கொள்ளலாம். தக்காளியை தொடர்ந்து உட்கொள்வதால் உணவுப்பாதை, சிறுநீர்ப்பாதை மற்றும் புராஸ்டேட் கிளான்டில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கோடைகாலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைய தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி வருவதால் தோல் மென்மையடைவதுடன் குளிர்ச்சியும் உண்டாகும்.

admin

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

1 hour ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

1 hour ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

2 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

2 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

2 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

19 hours ago