Beast Movie Review
பீஸ்ட்
நடிகர் விஜய்
நடிகை பூஜா ஹெக்டே
இயக்குனர் நெல்சன் திலீப்குமார்
இசை அனிருத்
ஓளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா
இராணுவத்தில் ரா பிரிவில் பணியாற்றி வரும் விஜய், தீவிரவாதி உமர் பரூக் என்பவரை பிடிக்க முயற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக ஒரு குழந்தை இறந்து விடுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விஜய், இராணுவ வேலையை விட்டு, விடிவி கணேஷ் நடத்தி வரும் செக்குரிட்டி அலுவலகத்தில் வேலை செய்கிறார்.
அப்போது விஜய் ஒரு மாலுக்கு செல்லும் போது அங்கு தீவிரவாதிகள் பொதுமக்களை பணைய கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள். மேலும் உமர் பரூக்கை விடுவிக்க கோரிக்கை வைக்கிறார்கள்.
இறுதியில் விஜய், மாலுக்குள் இருக்கும் தீவிரவாதிகளை அழித்து பொதுமக்களை எப்படி காப்பாற்றினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் வீரராகவன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் விஜய். சண்டைக்காட்சிகளில் மாஸ் காண்பித்து இருக்கிறார். குறிப்பாக டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் விஜய். நாயகியாக வரும் பூஜா ஹெக்டே, கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். அதிகாரியாக வரும் செல்வராகவன் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு வெளிப்படுத்தி இருக்கிறார்.
படத்திற்கு பெரிய பலம் விடிவி கணேஷ். பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்து இருக்கிறார். யோகி பாபு ஒரு சில இடங்களில் வந்து சென்றிருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் சதீஷின் நடிப்பு ஓவர் ஆக்டிங்.
பழைய கதையை தூசி தட்டி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் நெல்சன். வழக்கமான திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்து கொடுத்து இருக்கிறார். நிறைய லேக் லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
மொத்தத்தில் ‘பீஸ்ட்’ கலகலப்பு.
Jedusi Official Teaser | Sridhar, Swetha | Nataraj Ekambaram | Vigneshwaran | MRT Music
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,…
சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய ரூ.200 கோடி பணமோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில், பாலிவுட் நடிகையும் நடனக் கலைஞருமான…
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீன்’. சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான…
கேரளாவில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்கள் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் பங்களிப்புடன் ‘கிளிக்’ (CLICK) என்ற புதிய…
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ (Scene) திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு…