Beast Movie Release Banned in Kuwait
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் இந்தியாவில் வெளியாகும்போது உலகம் முழுவதும் வெளியாவது வழக்கம்.
அந்தந்த நாடுகளில் தணிக்கை குழுவுக்கு ஏற்பவே படங்கள் வெளியாகும். குறிப்பாக குவைத் நாட்டில் தீவிரவாதிகள், வன்முறை குறித்த காட்சிகள், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து போன்ற படங்களுக்கு எப்போதும் அனுமதி அளிப்பது கிடையாது. தற்போது வரை இந்த நடைமுறை இது கட்டுப்பாட்டோடு குவைத் அரசு அமல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் அதிகமாக வன்முறை காட்சிகள் இருப்பதன் காரணமாக குவைத் நாட்டில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கும் இந்த நாட்டில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அதுபோல் தீவிரவாதிகள் பற்றி பேசிய FIR உள்ளிட்ட படங்களுக்கு குவைத் நாட்டில் ரிலீஸ் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…