Baizan Movie First Look and Shooting Photo viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அப்பாவுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
ஆனால் படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன் என பலர் இணைந்து நடிக்க ‘பைசன்’ என டைட்டில் வைத்துள்ளனர்.
இந்த படத்துக்கு நிவாஸ் K பிரசன்னா இசையமைக்க, எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…