Categories: Health

இந்த 10 கெட்ட பழக்கங்கள் தான் மன அழுத்தத்தை அதிகரிக்குமாம்! உஷாரா இருங்க

உலக அளவில், மனிதர்களிடமுள்ள குறைபாட்டில் மன அழுத்தமே முதலிடத்தில் உள்ளது. இது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குடும்ப சச்சரவு, வேலை மற்றும் கல்வி அழுத்தம் அல்லது பணம் போன்றவை வெளிப்புற காரணிகள். குறைந்த சுய மதிப்பீடு, சுய மரியாதை, அவநம்பிக்கை மற்றும் போன்றவை சில உள் காரணங்கள் கூட மன அழுத்தத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

குறிப்பாக மன அழுத்தம் அதிகமாகி கட்டுப்பாடற்ற நிலைக்கு செல்லும் போதுதான் மனநோய் ஏற்படுகிறது.

இதிலிருந்து விடுபட பல்வேறு வழிகள் இருந்தாலும் சிலர் அவர்களை தெரியமால் பின்பற்றி வருகின்றனர்.  இதனால் மன அழுத்தம் அதிகரிக்குமே தவிர குறையாது.

உதாரணமாக, தொலைக்காட்சி பார்த்தால், மன அழுத்தம் குறையும் என்று மனதை ரிலாக்ஸ் செய்ய டிவியைப் பார்ப்போம். ஆனால் உண்மையில் அவை தான், மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

எனவே மனதை அழுத்தமின்றி வைப்பதற்கு, ரிலாக்ஸ் செய்ய மேற்கொள்ளும் தவறான செயல்களை மேற்கொள்ளாமல் இருப்பதே, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும்.

தற்போது மன அழுத்தம் குறையும் என்று நினைத்து செய்யும் தவறான பழக்கவழக்கங்கள் என்னவென்று இங்கு பார்ப்போம்.

  • காலையில் தாமதமாக எழுந்து வேலைக்கு நேரமாகிவிட்டது என்று அவசர அவசரமாக காலை உணவை சாப்பிடாமல் கூட சிலர் செல்வதுண்டு. இதனால் அன்றைய நாள் ஒருவித மன அழுத்தத்துடனேயே இருக்கும். அதையே தினமும் தொடர்ந்து பின்பற்றினால், மன அழுத்தம் அதிகரித்து, வேறு சில உடல் பிரச்சனைகளும் ஏற்படும்.
  • மனதை அமைதிப்படுத்துவதற்கு சிலர் டிவியைப் பார்ப்பார்கள். ஆனால் அவ்வாறு டிவி பார்ப்பது, உண்மையில் மன அழுத்தத்தைத் தான் அதிகரிக்கும்.
  • புகைப்பிடித்தால், மன அழுத்தம் குறையாது. ஏனெனில் பொதுவாக டென்சனாக இருக்கும் போது இதயத் துடிப்பின் அளவானது அதிகமாக இருக்கும். இந்த நேரம் புகைப்பிடித்தால், இது தற்காலிகமாக சிலருக்கு அமைதியைக் கொடுத்தாலும், உண்மையில் அது மனதை அழுத்தம் அடையச் செய்து, வேறு சில தீவிர பிரச்சனைகளை உண்டாக்கும்.
  • எப்போதுமே அலுவலகத்தில் இருந்தால், அது மனதை எப்போதும் ஒருவித அழுத்தத்திலேயே வைத்திருக்கும். அது வெளிப்படையாக தெரியாது. ஆனால் சில சமயங்களில் அந்த அழுத்தமானது மனதிற்குள்ளேயே அதிகரித்து, மாரடைப்பை ஏற்படுத்திவிடும்.
  • போதிய இடைவெளியில் உணவுகளை சாப்பிடாமல் இருப்போம். மேலும் அப்போது ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவோம். இவ்வாறு சரியான நேரத்தில், சரியான உணவை சாப்பிடாமல் இருந்தால், அது உடல் எடையை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தையும் அதிகரிக்கும்.
  • அலுவலகத்தில் அதிகப்படியான வேலைப்பளு என்பதால், அங்குள்ளோரின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்துண்டு. இதனால் மன அழுத்தம் அதிகரிக்குமே தவிர கோபம் குறையாது. எனவே ஏதேனும் கோபம் என்றால், முதலில் அதனை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  • நிறைய மக்கள் மன அழுத்தம் கட்டுப்படுத்த நம்மில் சிலர் டெசர்ட் (dessert) அல்லது வறுத்த ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவார்கள். ஆனால் அந்த ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால், மன அழுத்தமானது குறையாது. அது உடல் எடையை அதிகரிப்பதோடு, இன்னும் மன அழுத்தத்தை அப்படியே தான் வைத்திருக்கும்.
  • உடற்பயிற்சி இல்லாவிட்டால், மன அழுத்தம் குறையாமல், இன்னும் தான் அதிகரிக்கும்.
  • அதிகமான வேலைப்பளுவினால், சிலருக்கு அழகைப் பராமரிக்க நேரமின்றி இல்லாததால் வெளியே செல்லும் போது, மற்றவரை பார்க்கும் போது நாம் அழகாக இல்லை என்ற எண்ணத்திலேயே மனதில் ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது.
  • ஒருவருக்கு 7 மணிநேர தூக்கமானது மிகவும் இன்றியமையாதது. ஆனால் நிறைய மக்கள் குறைந்த நேரம் மட்டும் தூங்குவதால், அது மனதில் எரிச்சலை உண்டாக்கி, தலைவலி மற்றும் சோர்வை ஏற்படுத்தி, இறுதியில் மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.
admin

Recent Posts

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

2 hours ago

விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ்.??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…

5 hours ago

ஸ்ருதிக்கு வந்த ஐடியா, பிரச்சனையில் சிக்கிய சீதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…

6 hours ago

சபரி மற்றும் பார்வதி இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

6 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, சுந்தரவள்ளி முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

8 hours ago

கனி கேட்ட கேள்வி, பார்வதி சொன்ன பதில், வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

9 hours ago