Categories: NewsTamil News

பிரான்ஸ், ஜெர்மனியில் மீண்டும் ரிலீசாகும் பிகில்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் நயன்தாரா, டேனியல் பாலாஜி, கதிர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக படம் சறுக்கினாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இப்படம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஜெர்மனியில் ஆண்டுதோறும் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அவர் நடித்த படங்களை திரையிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில், இந்தாண்டு பிகில் படத்தை அரசாங்க நிபந்தனைகளுடன் திரையிட உள்ளனர். பிரான்சில் வருகிற ஜூன் 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பிகில் படம் திரையிடப்பட உள்ளது.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

Haiwaan Official Teaser

Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions

9 hours ago

Ram in Leela Official Trailer

Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…

11 hours ago

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்?

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…

11 hours ago

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…

11 hours ago

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகினி…

1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

11 hours ago

‘எல்.கே.ஜி’ பாணியில் அரசியல் வருகையா? ரசிகரின் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி பதில்!

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…

11 hours ago