Action King Arjun’s First Look as Veeravi in Polimera 3 Unveiled
ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று முந்தைய இரண்டு பாகங்களும் வெற்றியடைந்த ‘பொலிமேரா’ திரைப்படத் தொடரின் மூன்றாம் பாகமாக ‘பொலிமேரா 3’ உருவாகி வருகிறது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இதில் முக்கிய கதாபாத்திரமான வீராவியாக நடிக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு வெளியான அர்ஜுனின் இந்த அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. (ஏசியன் குழுமம்) நிறுவனங்கள் சார்பில் வம்சி நந்திபாடி மற்றும் பரத் நரங் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். டாக்டர் அனில் விஸ்வநாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
காமாட்சி பாஸ்கர்லா, பாலாதித்யா, கெட்டப் ஸ்ரீனு, ராகேந்து மௌலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, கிருஷ்ண பிரசாத் இசையமைக்கிறார்.
முந்தைய பாகங்களை விட பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகும் ‘பொலிமேரா 3’, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சீன்’. இப்படத்தில் நடிகை…
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பதவி வகித்து வருபவர் நடிகர் பவன் கல்யாண். அரசியலில் முக்கியப் பொறுப்பு வகிக்கும்…
நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் போஸ்டரைப் பகிர்ந்து இப்படம் குறித்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.…
சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே நடிகை பிரியா பவானி சங்கரும், ராஜவேலுவும் காதலித்து வந்தனர். நீண்டகாலமாகத் தொடர்ந்த இவர்களது காதல்…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
Theeraaganam Lyrical Video | Family Boy | Mithun Manickam | Nirmal JP | Adithya RK…