baakiyalakshmi serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் டாக்டர் கங்கிராஜுலேசன் உங்க வைஃப் கன்சிவா இருக்காங்க என்று சொன்னதும் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
கோபி ரெண்டு மூணு வாரம் கழிச்சு ஸ்கேன் பண்ணலாம்னு சொன்னீங்களே அப்ப இப்ப கன்ஃபார்ம்னு சொல்றீங்க என்று கேட்க ஆமா சார் அது ரெகுலர் செக்கப் என்று சொல்கிறார். பிறகு நான் எழுதிக் கொடுக்கிற மாத்திரை மட்டும் சாப்பிடுங்க என சொல்லும் டாக்டர் இது எத்தனையாவது குழந்தை என்று கேட்கிறார். ராதிகா இரண்டாவது குழந்தை என்று சொல்ல கோபி நான்காவது குழந்தை என்று சொல்கிறார்.
முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம் என்று கேட்க ராதிகா 14 வருடம் என்று சொல்ல கோபி செழியன் வயதை கணக்கு போடுகிறார். பிறகு இருவரும் வீட்டுக்கு வராமல் காரிலேயே ரவுண்டு அடித்துக் கொண்டிருக்க கோபி இந்த ரோட்டில் கிட்டத்தட்ட 10 தடவை ரவுண்டு அடிச்சிட்டோம் இப்ப என்ன பண்ணட்டும் என்று கேட்க ராதிகா என்னை இப்படி இறக்கி விட்டுடுங்க நான் எங்கேயாவது போறேன் என கோபப்படுகிறார்.
பிறகு ஈஸ்வரி போன் போட்டு எங்க இருக்கீங்க எப்ப வருவீங்க என கேட்கிறார். அடுத்ததாக ராதிகா என்னை எங்க அம்மா வீட்டுல விட்டு நீங்க ஹோட்டலுக்கு போங்க என்று சொல்ல கோபியில் ராதிகாவை வீட்டில் விட்டுவிட்டு கிளம்பி செல்கிறார். வீட்டுக்கு வந்த ராதிகா வாந்தி எடுத்துவிட்டு அம்மாவிடம் கர்ப்பமாக இருக்கும் விஷயம் பற்றி சொல்ல அவர் சந்தோஷப்படுகிறார்.
இதை குழந்தை வேண்டுமானு குழப்பமா இருக்கு என்று ராதிகா சொல்ல கண்டிப்பா குழந்தை வேணும். இந்த குழந்தை தான் உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஒரு பிடிப்பு. மாமியார் ஏற்கனவே மாப்பிள்ளையை அங்க கூட்டிட்டு போயிட்டாரு அவர் நம்ம கூடவே இருக்கணும்னா இந்த குழந்தை வேண்டும் என சொல்ல ராதிகாவும் அதை யோசித்து சந்தோஷப்படுகிறார்.
அடுத்ததாக கோபி ரெஸ்டாரன்ட் வந்ததும் ஈஸ்வரி முதுகு வலிக்குது கால் வலிக்குது என டிராமா போடுகிறார். ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்க கோபி டெஸ்ட் எல்லாம் எடுத்தாங்க என்று சொல்ல ஏன் உன் பொண்டாட்டி உண்டாகி இருக்காளா என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார். அம்மாவுக்கு எப்படி விஷயம் தெரியும் என்று கோபி புலம்பி அதெல்லாம் தெரிந்து இருக்காது என மனதை தேற்றிக் கொள்கிறார்.
அதன் பிறகு ரெஸ்டாரண்டுக்கு வரும் பழனிச்சாமி பாக்யாவுக்கு புத்தகங்களை வாங்கி வந்து கொடுக்க பாக்கியா அவருக்கு ஸ்பெஷலாக ஸ்வீட் செய்து கொடுக்கிறார். புத்தகத்திற்கு எவ்வளவு செலவாச்சு என்று பாக்கியா கேட்க அன்புக்கு விலை பேசாதீங்க என்று பழனிச்சாமி சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தாய்ப்பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக…
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக்…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
Bison Kaalamaadan Trailer | Dhruv, Anupama Parameswaran | Mari Selvaraj | Nivas K Prasanna
Gen Z Romeo Video Song | Kambi Katna Kathai | Natty Natraj, Singampuli, Sreerranjini, Shalini