Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அடம் பிடித்த ராஜி. கதிர் சொன்ன வார்த்தை. இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மீனா கதிரிடம் நீங்க எடுத்த முடிவு சரி அத்தை எடுத்த முடிவு சரி எனக்கு இரண்டுத்துளையுமே உடன்பாடு கிடையாது நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க இப்ப கூட உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லைன்னு சொல்லுங்க அத்தை கிட்ட நான் பேசுறேன் என்று கூறுகிறார். ஆனால் பதில் அம்மா இதுவரைக்கும் எதையும் ஆசைப்பட்டு கேட்டது கிடையாது முதல் முறையாக கேட்டிருக்காங்க. அவங்க என்ன பத்தி யோசிக்காமல் இந்த முடிவு எடுத்திருப்பாங்க என்று சொல்லி தனது முடிவில் மாற்றம் இல்லை என்று சொல்லி விடுகிறார்.

மறுபக்கம் கோமதி அழுது கொண்டிருக்க பாக்யா ஆறுதல் சொல்ல அந்த நேரம் பார்த்து பாண்டியன் போன் செய்ய நான் போன் எடுக்க மாட்டேன் அவர்கிட்ட பேசுற தெம்பு எனக்கு இல்ல என்று கலங்குகிறார். பிறகு ராஜி அழுது கொண்டே இருக்க பாக்கியா ஆறுதல் சொல்ல கவிதை எனக்கு பிடிக்கவே பிடிக்காது அவனுக்கும் என்ன பிடிக்காது எங்களுக்கு கல்யாணம் நடந்த அது ரெண்டு பேருக்கும் நல்லது கிடையாது நான் இந்த கல்யாணத்தை பண்ணிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க செல்வி பிடித்து திட்டி விடுகிறார். பாக்கியா உங்க அத்தை ரொம்ப யோசிச்சு தான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்காங்க இதுக்கு இதை விட்டால் வேற வழி கிடையாது என்று சொல்கிறார்.

கதிர் சோகமாக இருக்க எழில் உங்களுக்கு விருப்பம் இல்லனா சொல்லுங்க உங்க அம்மாகிட்ட நான் பேசுறேன் என்று சொல்ல தன்னுடைய அம்மாவுக்காக எத வேணாலும் செய்வேன் என்று கதிர் கூறுகிறார். மறுநாள் இருவரையும் கல்யாணத்திற்காக ரெடி செய்து கோவிலுக்கு அழைத்து வருகின்றனர்.

மாலை மாற்றிக் கொள்ளும் நேரத்தில் இருவரும் இதற்கு முன்னதாக சண்டை போட்டுக் கொண்ட விஷயங்களை நினைத்துப் பார்க்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
baakiyalakshmi serial episode-update