பூஜையுடன் சமயலை தொடங்கிய பாக்யா. ஷாக்கான கோபி.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியில் ராதிகாவும் காரில் சந்தோஷமாக வருகின்றனர். ராதிகா கோபியிடம் ஏன் அமைதியாக வரீங்க என்று கேட்க எனக்கு இந்த பங்க்ஷன், கூட்டம் இதெல்லாம் பார்த்தா அலர்ஜி, இப்பதான் நாலு நாளைக்கு முன்னாடி ஒரு எங்கேஜ்மென்ட் பங்க்ஷன் என்று சொல்லி கூட்டிட்டு போன, இப்ப திரும்பவும் என்னை பார்சல் பண்ணி இங்க கூட்டிட்டு வந்துட்ட என்று சொல்ல ராதிகா அவங்க எங்களுடைய ஃபேமிலி பிரண்ட்ஸ், எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும் என சொல்கிறார்.

அதன் பிறகு இருவரும் ரெசார்டுக்கு வந்து இறங்க பிறகு மேனேஜர் இவர்களை ஹோட்டல் ரூமில் அழைத்துச் சென்று விடுகிறார். கோபி ரூம் சூப்பரா இருக்கு நம்ம ரெண்டு பேர் எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் சந்தோஷமா இருக்கலாம் என சொல்ல ராதிகா அப்படி மட்டும் சொல்லாதீங்க, நீங்க வெளியே கூட்டிட்டு போய் இப்படி சொன்ன இடம் எல்லாம் நம்ம நல்லா அடி வாங்கி இருக்கோம் என ஊட்டி உட்பட பல இடங்களில் இதுவரை நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார்.

மறுபக்கம் பாக்கியா பதட்டத்தோடு சாப்பாட்டு லிஸ்ட் பார்த்துக் கொண்டே வர பழனிச்சாமி பார்த்து எதுக்கு இப்படி பதட்டமா இருக்கீங்க கண்ண மூடி மூச்சை இழுத்து விடுங்கள் என சொல்லி பாக்கியாவை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறார். நல்லபடியா சமைங்க பயப்பட வேண்டாம் என சொல்லி அனுப்ப பிறகு பாக்கியா கிச்சனில் பூஜையை செய்து வேலைகளை தொடங்குகிறார்.

பிறகு பழனிச்சாமி தன்னுடைய நண்பர் சுதாகரிடம் கல்யாணத்திற்கு பெண் பார்க்க போகும் போது நடந்த விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்க இப்போ எங்க அம்மாவோட சேர்ந்து இந்த பாக்கியா மேடம் அவர்கள் குடும்பமும் எப்ப பார்த்தாலும் கல்யாணம்னு பேசுறாங்க என்று சொல்ல சுதாகர் பாக்கியா மேடமா? சமைக்கிறவங்களா என்று கேட்க ஆமா நானும் அவங்களும் கிளாஸ்மேட் என சொல்கிறார்.

நீயும் நானும் பாய்ஸ் ஸ்கூல்ல தான் படிச்சோம் அப்படி இருக்கும் போது எப்படி கிளாஸ்மேட் என கேட்க ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போகிறோம் என்று சொல்கிறார். அதனைத் தொடர்ந்து இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது கோபி வெளியே வர பழனிச்சாமியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

இந்த லாம்ப் போஸ்ட் இங்க என்ன பண்றான் என கோபி வேக வேகமாக வர இவரை பார்த்த பழனிச்சாமி அட கோபி அண்ணே நீங்க என்ன இங்க என்று கேட்க கல்யாணத்துக்கு வந்ததாக சொல்ல நீங்க பொண்ணு வீடா பையன் வீடா என விசாரிக்க கோபி நாங்க பொண்ணு வீடு என்று சொல்ல நான் பையன் வீடு என்று பேச கோபி அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறார்.

என்னை நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா பின்னாடியே வந்துட்டான் என கோபி புலம்புகிறார். பிறகு பழனிச்சாமியின் சுதாகர் மீண்டும் பெண் பார்க்க போன கதைகளை பேசுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 30-06-23
jothika lakshu

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

4 hours ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

4 hours ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

4 hours ago

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

5 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

5 hours ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

5 hours ago