பாக்கியலட்சுமி சீரியலில் கோபியால் ஏற்பட்ட சோகம்… இன்றைய முழு எபிசோட் இதோ…

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபிக்கு கல்யாணம் என தெரிந்ததும் தூக்கம் வராமல் தவிக்கும் அவருடைய அப்பா நேராக மேலே எழுந்து செல்கிறார். கோபி ராதிகாவுடன் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் கதவை திறந்து உள்ளே வருகிறார் அவருடைய அப்பா. நீ எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்தும் இன்னும் ராதிகாவை பார்க்கறதும் அவ கிட்ட பேசறதுமா தான் இருக்க, நீ திருந்தவே மாட்டியா என திட்டுகிறார்.

தேவையில்லாமல் தினம் தினம் சின்ன பையனை மிரட்டுற மாதிரி நடந்துக்கிட்டு இருக்காதீங்க என கோபி பதிலுக்கு சத்தம் போடுகிறார். எனக்கும் உங்களை மாதிரி கோபம் வரும் என கூறுகிறார். இப்போ நான் என்ன தப்பு பண்ணேன் வந்து கத்திக்கிட்டு இருக்கீங்க அதான் சத்தியம் பண்ணிக் குடுத்துட்டேன்ல அப்புறம் என்ன என கேட்கிறார்.

மயூரா இன்னிக்கு வீட்டுக்கு வந்தா, அதான் அந்த ராதிகா பொண்ணு. எங்க அம்மாவுக்கும் கோபி அங்கிளுக்கும் கல்யாணம் என சொன்னதும் என்னுடைய ஈரக் குலையே நடுங்கி போச்சு. ‌ இந்த வீட்டுக்கு நீ கண்டிப்பா துரோகம் தான் பண்ண போற, இனிமே உன்ன விடமாட்டேன். பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிட்ட பிறகு உனக்கு கல்யாணம் கேவலமா இல்ல என சத்தம் போடுகிறார். என்ன பண்ண போறீங்க ராதிகா வீட்டில் போய் சத்தம் போட போறீங்களா என கோபி கேட்கிறார். போவேன் கண்டிப்பா ராதிகா வீட்டுக்கு போவேன் அதுக்கு முன்னாடி நம்ம வீட்ல இருக்க எல்லார்கிட்டயும் உண்மையை சொல்லி உன்னுடைய யோகிதை என்னன்னு காட்டப் போறேன் என கூறுகிறார்.

போய் சொல்லுங்க அப்படியாச்சும் நான் நிம்மதியா இந்த வீட்டை விட்டு வெளியே போகலாம்ல என கூறுகிறார் கோபி. மிகுந்த கோபத்தோடு மேலே இருந்து கீழே இறங்கும் கோபியின் அப்பா படிக்கட்டில் தவறி கீழே விழுந்து விடுகிறார். அவர் போட்ட சத்தத்தில் வீட்டில் உள்ள அனைவரும் பதறிப் போய் ஓடி வருகின்றனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். பாக்கியா, கோபி, எழில் மற்றும் செழியன் என நான்கு பேர் மட்டும் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

அவர் மயக்க நிலையில் இருக்க மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து கொண்டிருக்கின்றனர். எழிலும் பாக்கியாவும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க கோபி அதெல்லாம் ஒன்றும் ஆகாது சரியாகி வந்துவிடுவார் என ஆறுதல் கூறுகிறார். பிறகு செழியன் கோபியை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகிறார். இல்ல நான் இங்கேயே இருக்கேன் என கோபி சொல்ல பாக்கியா இல்ல நீங்க வீட்டுக்கு போங்க நீங்க போனாத்தான் அத்தை இனியாவை சமாதன படுத்த முடியும் என கூறுகிறார். பிறகு கோபியும் வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார்.

வீட்டுக்கு வந்த கோபியிடம் ஈஸ்வரி கண் கலங்குகிறார். இவர் எதுக்கு மேலே போகணும்? படுத்து தூங்க வேண்டியது தானே? மதியத்திலிருந்தே அவர் சரியில்ல, சோர்ந்து போய் உட்கார்ந்துட்டாரு சரியா சாப்பிடல என கூறி அழுகிறாள். கோபி அப்பாக்கு ஒன்னும் இல்ல சரியாகி நாளைக்கு வந்து விடுவார் என கூறுகிறார். அவர் அம்மா அழுவதைப் பார்த்து அவரும் கண் கலங்குகிறார்.

மறுநாள் காலையில் கோபி மருத்துவமனைக்கு கிளம்பி வந்து என்ன சொன்னாங்க என கேட்க எதுவும் சொல்லல இன்னும் நினைவு வரல என்று சொன்னாங்க என எழில் கூறுகிறார். பிறகு கோபியின் அப்பாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் வெளியே வந்து அவருக்கு பக்கவாதம் பேச்சு வராது. ஒரு கை ஒரு கால் வேலை செய்யல என ஆங்கிலத்தில் சொல்ல பாக்கியா எதுவும் புரியாமல் என்ன சொல்றீங்க என கேட்க தமிழில் சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Baakiyalakshmi Serial Episode Update 29.01.22
jothika lakshu

Recent Posts

Happy Raj – Official Trailer

Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…

9 hours ago

காலம் பேசாது.. ஆனால்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டயலாக் இதோ..!

காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

10 hours ago

அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. எதிர்பார்பை எகிற வைக்கும் அப்டேட் இதோ..!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…

11 hours ago

நெல்சன் இயக்கத்தில் உருவாக போகும் படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் ரஜினிகாந்த் செய்த செயல்..!

#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…

11 hours ago

கல்யாணத்தை அறைந்த ஹரிதா.. சூர்யா சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

12 hours ago

விஜயா கேட்ட கேள்வி.. சிந்தாமணி கொடுத்த பதில்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

16 hours ago