Bharathi Kannamma Serial Episode Update 29.01.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி வீட்டுக்குப் போன கண்ணம்மா இந்தாங்க நீங்க பயன்படுத்துன பொருட்கள், பைல்ஸ், எல்லாமே இருக்கு என எடுத்து வந்து கொடுக்கிறார். பிறகு அங்கிருந்து கிளம்பும்போது சௌந்தர்யா வந்துவிடுகிறார்.
அப்போது அவர் கோர்ட்டு சொன்ன தீர்ப்பு ஆறு நாள் தான் புரிஞ்சிருக்கு இன்னும் எவ்வளவு நாள் இருக்கு இனி எதுவும் வேண்டாம் என முடிவெடுத்துட்டியா என கேட்கிறார். அதெல்லாம் இல்லை இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. ஒரு நாளும் நான் செய்யாத தப்ப ஒத்துக்க மாட்டேன். நான் எந்த தப்பும் செய்யாதவ என்ற நிரூபிப்பேன். என் குழந்தைகளுக்கு அப்பா யார் என்று உலகம் அறிய தெரியப்படுத்துவேன் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
பிறகு பாரதி வெண்பாவுக்கு போன் போட்டு நடந்ததைக் கூறிப் புலம்புகிறார். உனக்காக நான் இருக்கேன் வீட்டுக்கு வா பாரதி என வெண்பா சொல்ல இன்னைக்கு வேல இருக்கு நாளைக்கு வருகிறேன் என சொல்கிறார். பாரதி வீட்டுக்கு வருவதாக சொன்னதை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறார் வெண்பா.
வீட்டுக்கு போன கண்ணம்மாவிடம் இனி டாக்டர் அங்கிள் சாப்பிட்டால் அதற்கு பணம் வாங்காதே என லட்சுமி கூறுகிறார். சரி இனிமே டாக்டர் அங்கிள் கிட்ட பணம் வாங்க மாட்டேன் என கண்ணம்மாவும் சொல்கிறார்.
பிறகு மறுநாள் பாரதியும் கண்ணம்மாவும் பள்ளியில் ஒன்றாக சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது ஹேமா அழுது கொண்டே வருவதை பார்த்து இருவரும் பதறுகின்றனர். லட்சுமி கீழே விழுந்துட்டா அதனாலதான் அழுகிறேன் என கூறுகிறார். அவ விழுந்தா அவதான அலுவலும் நீ எதுக்கு அழுவுற என பாரதி கேட்கிறார். ரவுடி யார்கிட்டயாவது சண்டைக்குப் போனேன் யாரையாவது பிடித்து தள்ளிட்டியா என கேட்கிறார்.
அதெல்லாம் இல்லை என ஹேமா கூறுகிறார். உடனே கண்ணம்மா உங்க அப்பா அப்படித்தான். என்ன நடந்ததுன்னு முழுசா தெரிஞ்சுக்காம அவராக ஒரு முடிவுக்கு வந்துவிடுவார் என சொல்லி காண்பிக்கிறார். பிறகு இலட்சுமி ஓட்டப்பந்தயம் வைத்தார்கள் அதில் சௌமியா என்ற பொண்ணு நான் ஜெயித்து விடுவேன் என ஓடும்போது காலை குறுக்கே விட்டு என்னை கீழே விழ வைத்து விட்டார் என கூறுகிறார்.
பிறகு நடந்ததை நான் சொல்லியும் மிஸ் கேட்கவில்லை. எனக்கு சப்போர்ட்டாக 3 மிஸ் பேசினாங்க என கூறுகிறார். அதுக்கப்புறம் திரும்பவும் ஓட்டப்பந்தயம் வைக்கிறதா சொல்லி இருக்காங்க என கூறுகிறார். திரும்பவும் ஓடப் போறியா என கேட்க ஆமா நான் எதுக்கு செய்யாத தப்ப ஒத்துக்கணும். எப்பயுமே செய்யாத தப்ப எடுத்துக்க கூடாது அப்படி ஒத்துக்கிட்டா காலம் முழுதும் அந்த பழி மேல விழுந்து விடும் என நீதான சொல்லித்தந்த. திரும்பவும் ஓடி நான் ஜெயித்துக் காட்டுவேன் என லஷ்மி கூறுகிறார். சூப்பர் லட்சுமி என கண்ணம்மா பாராட்டுகிறார். பாரதி அப்படியே உங்க அம்மாவை போலவே என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.
பிறகு கண்ணம்மாவிடம் 200 ரூபாய் வாங்கி நீங்க சாப்பிட்டதுக்கு எங்க அம்மாவுக்கு காசு கொடுத்தீங்களாமே இனி கொடுக்காதீங்க என அந்த காசை திருப்பிக் கொடுக்கிறார். அடுத்த வாரம் எங்க அம்மாவுக்கு பிறந்தநாள் வீட்டிலேயே சிம்பிளா கேக் வெட்டி கொண்டாடலாம் என இருக்கோம். நீங்க கண்டிப்பா வரணும் என லட்சுமி சொல்ல நான் எங்க டாடி கண்டிப்பா கூட்டிட்டு வரேன் என ஹேமா கூறுகிறார். பிறகு சரி வாங்க சாப்பிட போகலாம் என கண்ணம்மா இருவரையும் அழைத்துச் செல்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…