ஈஸ்வரி சொன்ன வார்த்தை, பாக்கியா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ரெஸ்டாரண்டில் கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கும் வேலையாட்கள் வேலையை முடித்துவிட்டு போகும் நேரத்தில் பாக்யாவிடம் எங்களுக்கு வேலை போய்டாதில்ல என்று கேட்க போறதா இருந்த அந்த ரெஸ்டாரன்ட் போனப்பவே அனுப்பி இருப்பேன் என்று சொல்லுகிறார். பிறகு அவர்கள் சென்றவுடன் கொஞ்ச நேரத்தில் இனியா வீடியோ கால் பண்ணி பேசுகிறார். நலம் விசாரித்துவிட்டு பாக்கியம் நித்திஷ் நல்லா பாத்துக்கிறாரா பிரச்சனை எதுவும் இல்லல்ல சண்டை எதுவும் போடலல என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லாம புரிஞ்சுகிட்டு தான் நடந்துக்கிறார் என்று சொல்லுகிறார்.

உன்னோட மாமனார் மாமியார் எல்லாம் நல்லா பேசுறாங்களா என்று கேட்க நல்லாத்தான் பேசுறாங்க நீ எங்க இருக்க வியூ காமி என்று சொல்ல பாக்கிய ரெஸ்டாரண்டில் இருப்பதை காண்பிக்கிறார் இது என்னமா பழைய ரெஸ்டாரண்ட் வந்திருக்கியா எப்பவுமே காலைல தான் நீங்க வருவ இப்ப என்ன நைட் வந்திருக்க என்று கேட்க, உடனே பாக்கியா இல்லை இன்னும் கொஞ்சம் ஆர்டர் விஷயமா வந்தேன் என சொல்லி சமாளிக்கிறார். பிறகு இனியா ஏற்கனவே பெயர் மாத்துர விஷயம் போய்கிட்டு இருந்தது அதெல்லாம் எப்படிமா போகுது ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல அது நடந்துட்டு தான் இருக்கு என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து செல்வி வருகிறார்.

செல்வியை பார்த்தவுடன் இனியா என்ன பேசுவது என புரியாமல் திக்க, எப்படி இருக்கீங்க ஆன்ட்டி என்று கேட்டுவிட்டு நான் போனை வைக்கிறேன்மா என சொல்ல, செல்வி இனியா பாப்பா எப்படிம்மா இருக்க நல்லா இருக்கியா உன் கல்யாணத்துக்கு வரணும்னு தான் நினைச்சேன் வர முடியாமல் போயிடுச்சு நீ சந்தோஷமா இருக்கணும் என்று சொல்ல பிறகு இனியா சாரி ஆன்ட்டி என்ன சொல்லுகிறார் நீ எதுக்குமா சாரி சொல்றேன் நீ சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான் என்று சொல்லுகிறார்.

போனை வைத்த பிறகு பாக்யா எங்க மேல உனக்கு கோபமாக இல்லையா செல்வி என்று கேட்க உன் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைந்த மாதிரி என் பையனுக்கும் நல்ல வாழ்க்கை அமையும் அவ்வளவுதான்கா என்ன இருக்கு என்று சொல்லிவிட்டு என் பிரச்சனையை விடு அக்கா உன்னோட ரெஸ்டாரன்ட் பிரச்சனை என்ன பண்றதுன்னு யோசிப்போம் என்று சொல்ல ஏற்கனவே ஆட்கள் வந்து வேலை நிறுத்திடுவீங்களான்னு என்கிட்ட கேட்டாங்க, நான் அப்படி நடக்காது என்று சொல்லி இருக்கேன் நீயும் அதே மாதிரி சொல்லிடு என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகின்றனர்.

மறுபக்கம் பாக்யாவிற்காக கோபி ஈஸ்வரி உட்கார்ந்து கொண்டிருக்க பாக்யா வந்தவுடன் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்லுகிறார் பாக்யாவும் என்ன விஷயம் என்று கேட்க ரெஸ்டாரன்ட் பற்றி கேட்கிறார் உடனே ஈஸ்வரி ஏற்கனவே சம்பந்தி காசு தரேன்னு சொல்லி இருக்காரு அதை வாங்கிட்டு நீ பேங்க்ல போட்டுட்டு உட்கார்ந்து சாப்பிட்டு போய் இருக்கலாம் என்று சொல்ல கோபி நீங்க அமைதியா இருங்கம்மா நான் பேசுகிறேன் என்று சொல்லுகிறார் இதுக்காக நீ சம்மந்தி கிட்ட கொஞ்சம் மரியாதை இல்லாம பேசாத பாக்கியா, கொஞ்சம் பொறுமையா பேசு என்று சொல்ல அதற்கு பாக்கியம் என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுக்க மாட்டேன் ஆனா மத்தவங்களால கெடுதல் வந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என இவர்களிடமும் சொல்லிவிட்டு சென்று விடுகிறார். ரூமுக்குச் சென்று பாக்யா தனியாக நின்று கொண்டிருக்க எழில் வருகிறார்.

பாக்கியாவிடம் அடுத்த படம் எடுக்கப் போகும் விஷயத்தை சொல்ல பாக்யா சந்தோஷப்பட்டு கங்கிராஜுலேசன் சொல்லுகிறார் ஆனால் எழில் வருத்தமாகவே இருக்கிறார். இல்லம்மா ஷூட்டிங் இங்க இல்ல வெளியூர்லையா என்று பாக்யா கேட்க தாய்லாந்துல மூணு மாசம் இருக்கு நான் வேணும்னா ப்ரொடியூசர் கிட்ட பேசி இங்க மாத்திடவா என்று கேட்க அப்படி எல்லாம் இல்லை எழில் நீ அங்கேயே போய் பண்ணு என்று சொல்ல அது மட்டும் இல்லாமல் அமிர்தாவையும் கூட்டிட்டு போகிற மாதிரி இருக்கும் என்று சொல்ல கண்டிப்பா நீ கூட்டிட்டு போ நாங்க பிரச்சனை எல்லாம் முடிச்சிட்டு டைம் இருந்தா வரேன் என சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் பாக்யா ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அந்த ரெஸ்டாரன்ட் ஓனர் வருகிறார் அவரை உட்கார வைத்து நலம் விசாரித்துவிட்டு பேசிக்கொண்டிருக்க பாக்கியா விட முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்லி நீங்க இந்த ரெஸ்டாரன்ட் காலி பண்ணனும் எனக்கு கடன் தொல்லை அதிகமா இருக்கு அதுக்காக நான் இதை வைக்கப் போறேன் என்று சொல்ல பாக்யா அதிர்ச்சி அடைகிறார். ஓனர் என்ன கேட்கிறார்?அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 28-04-25
jothika lakshu

Recent Posts

Manasukku Pudicha Ok Promo Song

Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K

4 hours ago

Bethlehem Kudumba Unit Tamil Trailer

Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju

4 hours ago

Muthumani Music Video

Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj

21 hours ago

Kalaivaniye Lyrical Video

Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan

21 hours ago

Jio Jiyale Lyrical Video

Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…

21 hours ago

En Samy Vettaiyadum Lyric Video

En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…

21 hours ago