கோபியை கடுப்பாக்கிய ராதிகா.. ஜானு அமிர்தாவுக்கு கொடுத்த ஷாக்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபி ராதிகா வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அவருக்கு ஜூஸ் கொடுத்த ராதிகா டீச்சரை அவருடைய அஸ்பண்ட் பிசினஸ் செய்ய வேண்டாம் என சொல்லி விட்டார். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு தெரிஞ்சோ தெரியாமலோ அவர்களுடைய பிசினசை நிறுத்த நான் ஒரு காரணம் ஆகி விட்டேன் என சொல்ல கோபி கடுப்பாகி டென்சன் ஆகிறார். டீச்சரை பற்றி பேசினாலே ஏன் டென்ஷன் ஆகுறீங்க என ராதிகா கேட்கிறார். பிறகு எனக்கு ஒரு ஐடியா தோணுது நாம ரெண்டு பேரும் போய் டீச்சரோட ஹஸ்பண்டை பார்த்து பேசலாம் என சொல்ல கோபி இதனை தடுத்து நிறுத்த என்னென்னமோ முயற்சி செய்கிறார். ஆனால் ராதிகா உறுதியாக இருப்பதால் வேறு வழியில்லாமல் கோபி சரி நீ இரு நானே போய் பேசிட்டு வரேன் நீ எதுக்கு அங்க எல்லாம் வரணும் என கூறுகிறார்.

நீ டீச்சர் வீட்டு அட்ரஸ் மட்டும் கொடு நான் பேய் பேசுறேன் என சொல்கிறார். நானும் வரேன் நீங்க மட்டும் போனா நல்லா இருக்காது என சொல்ல அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக்கிறேன் உனக்கு டீச்சர் பிசினஸ் மீண்டும் தொடங்கணும் அதானே, எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் என கூறுகிறார். பிறகு ராதிகா டீச்சர் வீட்டு முகவரியை அனுப்பி வைத்து கோபியை போய் பேசிட்டு வருமாறு அனுப்புகிறார். கோபி என் வீட்டு அட்ரசை எனக்கே அனுப்புற என மனதுக்குள் புலம்பிக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

இந்த பக்கம் பாக்யா வீட்டில் உள்ளவர்களிடம் விஷயத்தை மூடி அதைப்பற்றிப் பேசி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். கை உடைந்த மாதிரி இருக்கு. அவர் பிசினஸ் பண்ண வேண்டாம்னு சொல்லி விட்டார் என்ன பண்றது குடும்பமா வேலையால் வரும்போது குடும்பம் தான் முக்கியம் என கண் கலங்குகிறார். ஹவுஸ் ஓனர் நம்பர் மாமா போன்ல தான் இருக்கு, அதை எடுத்து அவரிடம் பேசணும் என சொல்ல அவருடைய மாமனார் ஒரு வாரம் போகட்டும் என கூறுகிறார்.

அப்படியே இந்த பக்கம் அமிர்தா அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்க ஜானு உள்ளே வருகிறார். அவரிடம் எனக்கு எழிலை ரொம்ப நாளா தெரியும் அவன் மேல ஒரு க்ரஸ் இருந்தது. அதன் பிறகு அவனோட வேலை பண்ணும்போது லவ்வா கிளம்பியது. அத அவங்கிட்ட சொல்லும்போது அவன் சிரிச்சிட்டு கலாய்ச்சிட்டு போய்ட்டான். இப்போ திரும்பவும் அவனோட வேலை பண்ணும்போது லவ் வந்திடுச்சு அவன் கிட்ட சொல்லனும் என கூறுகிறார். இந்த முறை அவனை விடக் கூடாதே என ஜானு சொல்ல அமிர்தா கடுப்பாகி வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். பிறகு எழில் வந்து அமிர்தாவை பற்றி கேட்க ஜானு நடந்த விஷயத்தைச் சொல்ல எழில் அமிர்தாவை காதலிப்பது பற்றி கூறுகிறார்.

இந்த பக்கம் கோபி கரெக்டாக வீட்டுக்கு வந்ததும் ராதிகா போல் செய்கிறார் போயிட்டீங்களா? பேசி விட்டீர்களா? டீச்சரை பார்த்தீர்களா? என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இப்போதான் வந்தேன் வீட்டுக்கு வெளியே இருக்கேன் கார் பக்கத்துல ஒருத்தர் இருக்கார் அவர் தான் டீச்சரோட அஸ்பெண்டா இருப்பார் என நினைக்கிறேன் ஒரு நிமிஷம் இரு என கோபியை மாறி மாறி இரண்டு குரலில் பேசி ராதிகாவை ஏமாற்றுகிறார். பிறகு அவர் தன் அவர் வெயிட் பண்றது நான் பேசிட்டு வருகிறேன். அவரிடம் பேசிய பிறகு நான் எல்லாம் பொய் டீச்சரை பார்க்க மாட்டேன் என கூறுகிறார். ராதிகா போய் பார்த்துட்டு வாங்க என சொல்ல அதெல்லாம் வேண்டாம் சும்மா கடுப்பேத்தாத என சொல்லி போனை வைத்து விடுகிறார்.

பிறகு கோபி பாக்கியா ராதிகா என இரண்டு பேருக்கும் நடுவில் சிக்கி தவிப்பதை நினைத்து புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 27.04.22
jothika lakshu

Recent Posts

விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்களின் பதில்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

3 hours ago

காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

5 hours ago

விஜய் சேதுபதியின் பேச்சு.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

5 hours ago

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…

19 hours ago

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

1 day ago

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

1 day ago