குடும்பத்தினரை நிற்க வைத்து கேள்வி கேட்ட பாக்யா, கோபியின் முடிவு என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரன்ட் போன அதிர்ச்சியில் வந்து நிற்க இனியா கட்டுப்பிடித்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார் எப்ப வந்த என்று கேட்க ஒரு மணி நேரம் ஆச்சு என்று சொல்லுகிறார் ஏன் என்கிட்ட யாருமே சொல்லல என்று சொல்ல நான் தான் சொல்ல வேணாம் உனக்கு சர்ப்ரைஸா இருக்கணும்னு நினைச்சேன் என்று சொல்லி சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி மாப்பிள்ளை வந்திருக்கார் பாக்கியா என்று சொல்ல அவரிடம் சென்று நலம் விசாரித்து விட்டு நிற்க ஈஸ்வரி அவங்க சாப்பிட்டு தான் போகப் போறாங்க சாப்பாடு ஏற்பாடு செய் பாக்யா என்று சொல்லுகிறார் இனியா உங்க சாப்பாடு ரொம்ப மிஸ் பண்றா என்று நிதிஷ் சொல்ல பாக்யா சமைக்க செல்லுகிறார்.

பிறகு சமைத்து அனைவருக்கும் சாப்பாடு பரிமாற நிதிஷ் நிஜமாகவே இனியா சொன்னது கரெக்ட் தான் சூப்பரா இருக்கு ஆன்டி உங்க சமையல் என்று பாராட்டுகிறார் கோபி மாப்பிள்ளைக்கு பொரியல் வை பாக்யா, அப்பளம் பை பாக்கியா, ஆம்லெட் வை பாக்யா என பேச கோபியை பார்த்து பாக்யா முறைக்கிறார். சாப்பாடு பரிமாறிய பிறகு அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க கிச்சனில் பாக்யா சோகமாக இருப்பதை கவனித்த இனியா உனக்கு என்னாச்சும்மா எல்லாமே ஓகேவா என்று கேட்கிறார்.

நான் நல்லா தான் இருக்கேன் இனியா என்று சொல்ல ரெஸ்டாரன்ட் பிரச்சனை என்ன ஆச்சு என்று கேட்க எல்லாம் நல்லபடியா முடிஞ்சது என்று சொல்லி சமாளிக்கிறார். நீ எப்படி இருக்க உன்னை எப்படி பார்த்துக்கிறாங்க உன்னோட மாமனார் மாமியார் இப்படி பார்த்துக்கிறாங்க என்று கேட்க எல்லோரும் நல்லா தான் பாத்துக்கறாங்க என்று சொல்லுகிறார். உடனே அனைவரும் சொல்லிவிட்டு கிளம்ப குடும்பத்தினர் அனைவரும் வெளியில் சென்று வழி அனுப்புகின்றனர் ஆனால் பாக்யா கோபத்தில் உள்ளே உட்கார்ந்து விடுகிறார்.

ஈஸ்வரி உள்ளே வந்து மாப்பிள்ளையை வழி அனுப்ப வெளிய வர தெரியாதா அப்புறம் அவர் தப்பா நினைச்சுக்க மாட்டாரா என்று கேட்க மாப்பிள்ளை கூட்டிட்டு வாங்க மாப்பிள்ளை ஓட அப்பா அம்மாவ கூட்டிட்டு வாங்க விருந்து வெச்சு சமைச்சு கொட்ற என்று கோபப்படுகிறார். என்ன பாக்யா பேசிக்கிட்டு இருக்க நீ என்று ஈஸ்வரி கேட்க, போய் எல்லாரையும் கூட்டிட்டு வாங்க எல்லாருக்கும் வடிச்சு கொட்டற, விதவிதமா சமைச்சு போடுறேன் ஏன்னா இன்னிக்கி நான் ரொம்ப சந்தோஷமா இருக்கு அது தலக்காலே புரியல எனக்கு என்று சொல்லி பேசுகிறார்.

என்ன பேசிகிட்டு இருக்க பாக்யா நீ என்று ஈஸ்வரி கேட்க நான் அவ்வளவு தூரம் வேணாம்னு சொல்லியும் எல்லாரும் என்ன குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி காலி பாத்திரத்தில் கையெழுத்து போட சொன்னீங்க எனக்கு அப்பவே ஏதோ ஒன்னு பெருசா நடக்க போகுதுன்னு தெரியும் ஆனா அது இவ்ளோ சீக்கிரமா நடக்கும் என்று நான் நினைக்க ல எல்லாமே என் பொண்ணு இனியாவுக்காக மட்டும்தான் நான் அதை பண்ணேன் அவர் இன்னைக்கு ரெஸ்டாரண்டுக்கு வந்து நான் சைன் பண்ண பத்திரத்தை ஃபுல் பண்ணி எடுத்துக்கிட்டு வந்தாரு அதுல ரெஸ்டாரன்ட் நான் இனியாவது கிஃப்ட் பண்ணதா எழுதி இருக்காரு என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் ஆனால் செழியன் அவர் அப்படி பண்ணி இருக்க மாட்டார்மா நீ சரியா படிச்சு பாத்தியா என்று கேட்க ஆமா எனக்கு படிக்க தெரியாது இல்ல உனக்கு ஏபிசிடி கத்துக் கொடுத்ததை நான் தான் என்று சொல்லுகிறார்.

அதற்கு ஈஸ்வரி அவருக்கு அவ்வளவு ரெஸ்டாரன்ட் இருக்குது உன் ரெஸ்டாரன்ட்டில் தான் சம்பாதிக்க போராரா என்று கேட்க பாக்யா என்ன சொல்லுகிறார்? அதற்கு கோபியின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 18-04-25
jothika lakshu

Recent Posts

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

11 hours ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

11 hours ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

12 hours ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

12 hours ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

1 day ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

1 day ago