baakiyalakshmi serial episode update 16-02-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் திடீரென கணேஷின் அம்மாவிடமிருந்து பாக்யாவுக்கு போன் வர அவரும் இவங்க ஏன் போன் பண்றாங்க என்று குழம்பி போய் போனை எடுக்கிறார்.
பிறகு கணேஷோட அப்பாவுக்கு உடம்பு முடியல இன்னைக்கு நாளைக்குனு இருக்காரு, அமிர்தாவையும் நிலாவையும் பாக்கணும்னு ஆசைப்படுறாரு ஒரே ஒருமுறை அவங்கள கூட்டிட்டு வாங்க என்று கதறி அழ பாக்கியா ஏன் என்னாச்சு நல்லா தானே இருந்தாரு என்று கேட்க எல்லாம் கவலை தான் காரணம் என்று கூறுகிறார்.
ஒரே ஒருமுறை கூட்டிட்டு வர சொல்ல பாக்கியா இப்ப இருக்க சூழ்நிலையில அதெல்லாம் முடியுமான்னு தெரியல வீட்டுல பேசி பார்க்கிறேன் ஆனா முடியும்னு என்னால எந்த உத்திரவாதமும் கொடுக்க முடியாது என்று போனை வைத்து விடுகிறார்.
பிறகு வீட்டில் இருப்பவர்கள் எல்லோரையும் கூப்பிட்டு இந்த விஷயத்தை சொல்ல எல்லோரும் இது ஏதோ பிளான் மாதிரி இருக்கு அங்க போகக்கூடாது என்று சொல்லி விடுகின்றனர். ஈஸ்வரி எழிலுக்கும் அமிர்தாவுக்கும் இந்த விஷயத்தை சொல்லாத என கண்டிஷன் போடுகிறார்.
ஆனால் மனசு கேட்காத பாக்கியா கதவை தட்டி கணேஷ் அம்மா போன் பண்ண விஷயத்தையும் வீட்டில் அங்க போக வேண்டாம்னு சொல்லிட்ட விஷயத்தை ஏன் சொல்ல அமிர்தா ஏன் இப்படி எல்லாமே தப்பா நடக்குது என கலங்குகிறார். பிறகு எழில் உனக்கு அங்க போகணும்னு ஆசை இருக்கா என்று கேட்க அமிர்தா அதெல்லாம் இப்போ சரியா இருக்காது என்று சொல்லி விடுகிறார்.
அடுத்து மீண்டும் கணேஷ் அம்மாவிடமிருந்து போன் வர டாக்டர் அவர் பிழைக்க மாட்டார் என்று சொல்லிட்டாங்க, ஒரே ஒரு முறை அமிர்தாவையும் நிலாவையும் கூட்டிட்டு வந்து பத்து நிமிஷம் இங்க இருந்து கூட்டிட்டு போய்டுங்க, கணேசால எந்த பிரச்சனையும் வராது என்று சொல்ல பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் ஃபோனை வைத்து விடுகிறார்.
அடுத்ததாக அவர் கணேசை பிடித்து பாவி அவருக்கு உடம்பு சரியில்லன்னு இப்படி பொய் சொல்ல வச்சுட்டியே, அமிர்தாவையும் நிலாவையும் இங்கு வரவைக்க எனக்கு வேற வழி தெரியல என்று கணேஷ் ஏதோ வில்லதனத்தோடு ஒரு பிளானை வைத்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது.
இங்கே பாக்கியா மீண்டும் போன் வந்த விஷயத்தை அமிர்தாவிடம் சொல்ல அமிர்தா கலங்கி துடிக்கிறார். நான் வீட்ல பேசுறேன் என்று சொல்ல அமிர்தா வேண்டாம் என்று தடுத்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…