BaakiyaLakshmi Serial Episode Update 03-09-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் எழிலுக்கு போன் போட்டு தாத்தா இறந்த விஷயத்தை சொல்லுகிறார். எழில் அதிர்ச்சியாகி போனை கீழே போட்டு விட அமிர்தா போனை எடுத்து என்ன ஆச்சு என்று கேட்க தாத்தா இறந்துட்டாருமா உடனே கிளம்பி வாங்க என்று தெரியும் போனை வைத்து விடுகிறார். பிறகு எழில் அழுது கொண்டே இருக்க அமிர்தா சமாதானம் செய்து வீட்டுக்கு வருகின்றனர்.
வீட்டில் உள்ள அனைவரும் எழில் பார்த்தவுடன் அழ செழியன் எழிலை வந்து கட்டிப்பிடித்து அழுகிறார். வந்து தாத்தாவை பாரு என்று ரூமுக்குள் கூட்டி போக எழில் தாத்தாவைப் பார்த்து கண்கலங்கி நிற்கிறார். உடனே பாக்யா அழ, எழில் கத்தி கதறி அழுகிறார். இனியாவை கோபி சமாதானம் செய்ய, குடும்பத்தினர் அனைவரும் அழுது கொண்டிருக்கின்றனர்.
ஈஸ்வரி ராமமூர்த்திக்கு பிறந்தநாளுக்கு சாக்லேட் கொடுத்தது, புடவையைப் பற்றி கேட்டது, மாலை மாற்றிக் கொண்டது சாப்பாடு ஊட்டி விட்டது என அனைத்தையும் நினைத்து கண்கலங்குகிறார்.
பழனிச்சாமி வீட்டுக்கு வர கோபிக்கு ஆறுதல் சொல்ல கோபி கண்கலங்கி உள்ளே போக சொல்லுகிறார். உள்ளே வந்தவுடன் செழியன் பழனிச்சாமியை கட்டிப்பிடித்து அழுகிறார். பழனிச்சாமி ஈஸ்வரியை பார்த்து பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதல் சொன்ன அவர் யாருக்கும் எந்த தீங்கும் செய்தது கிடையாது என்று சொல்லி அழுகிறார். எங்க எல்லாரையும் அனாதையா விட்டுட்டு போயிட்டாரு, அவருக்கு பதில் நான் போய் சேர்ந்திருக்கும் என்று அழுது கொண்டே மயங்கி விடுகிறார்.
செழியன் தண்ணி எடுத்துக் கொண்டு வந்து தெளித்து ஈஸ்வரியை எழுப்புகிறார். ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார் பழனிச்சாமி ராமமூர்த்தியை போய் பார்க்க செல்கிறார்.
எழில் என்ன சொல்லி அழுகிறார்?பாக்யா சொன்னது என்ன? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
இட்லி கடை படத்தின் 7 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…