இனியாவால் மகிழ்ச்சி அடைந்த கோபி.. எழில் எடுத்த அதிரடி முடிவு.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமிர்தாவிடம் பிரச்சனை பண்ண ரவுடி அவருடைய அப்பாவை கீழே தள்ளிவிட அவர்கள் வீட்டிற்கு வந்ததும் விஷயம் தெரிந்து அவருடைய அம்மா பதறுகிறார். நீங்க எதுக்கு அவன் கிட்ட சண்ட போட்டுட்டு எனக் கேட்க அமிர்தாவை கிண்டல் பண்ணும் போது பாத்துக்கிட்டு சும்மா இருக்க சொல்றியா என கூறுகிறார்.

இந்த பக்கம் நல்ல மார்க் வாங்கிய இனியாவை பதினோராவது வகுப்பில் சேர்க்க கோபி பாக்கியா மற்றும் இனியா ஆகியோர் ஸ்கூலுக்கு செல்கின்றனர். அங்கு இனியாவின் தோழிகளிடம் என்ன குரூப் எடுக்க போறிங்க என பாக்கியா கேட்கிறார். பாக்யா இனியாவின் தோழிகளிடம் பேசியதை பார்த்து இனியா கடுப்பாகிறார். எதுவுமே தெரியாமல் எதுக்கு அவங்ககிட்ட இப்படி எல்லாம் பேச வேண்டும்? அம்மா ஒரு போர் என இனியா கோபியிடம் கூறுகிறார். பிறகு பீஸ் கட்டி முடித்ததும் இனியா எனக்கு ட்ரீட் வையுங்க வெளியில போய் சாப்பிடலாம் என சொல்ல பாக்யா வீட்ல அவ்வளவு சமைச்சு வெச்சிருக்கேன் என கூறுகிறார். வீட்ல இருக்கறத சாப்பிட ஆளா இல்ல? சரி வாங்க போகலாம் என கோபி கூப்பிட இனிய அம்மா வேண்டாம் அங்க இவங்க வந்தா இதை சாப்பிடாதே, அதை சாப்பிடாதே, இது எவ்வளவு, அது எவ்வளவு என பேசிக்கிட்டே இருப்பாங்க. நாம மட்டும் போகலாம் என சொல்ல கோபி ஆகியவை ஆட்டோவில் வீட்டுக்கு போக சொல்லிவிட்டு இருவரும் ஹோட்டலுக்கு கிளம்பி விடுகின்றனர்.

ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இனியா அம்மா போர் டாடி ஆனா வீட்டுல நல்லா அம்மா எது கேட்டாலும் சமைத்து தருவாங்க என கூறுகிறார். பாக்கியா பாவம்டா அவளுக்கு எதுவும் தெரியாது என கோபி கூறுகிறார். உங்களுக்கும் அம்மாவை பிடிக்காது தானே டாடி என கேட்க கோபி அப்படி எல்லாம் இல்லை என சமாளித்து விடுகிறார். பிறகு கோபி ஒருவேளை நானும் அம்மாவும் பிரிஞ்சிட்டா நீ யார் பக்கம் இருப்ப என கேட்க இனியா ஷாக்காகிறார்.

உடனே பதறிப்போன கோபி சும்மா ஜோக் என சொல்ல இனியா கண்டிப்பா உங்க பக்கம்தான் இருப்பேன் அம்மா போர் என இனியா கூறுகிறார். எப்ப பிரிய போறீங்க என கேட்க திரும்பவும் கோபி ஜஸ்ட் ஜோகிங் என கூறி விடுகிறார். இனியா உங்க கூடத்தான் இருப்பேன் என சொன்னதை கேட்டு கோபி மகிழ்ச்சி அடைகிறார்.

இந்த பக்கம் அமிர்தாவின் அப்பாவை அந்த ரவுடி கீழே தள்ளி விட்டதால் அவருடைய அம்மா இங்கே நமக்குனு யார் இருக்காங்க? அமிர்தா படிச்சதெல்லாம் போதும் நாமே ஊருக்கு போயிடலாம் என கூறுகிறார். இந்த நேரத்தில் என் போன் செய்ய அவரிடம் எதுவும் சொல்லாமல் மறைத்து விடுகிறார் அமிர்தா. குரல் ஒரு மாதிரி இருக்கு என்ன என எழும் கேட்டும் எதுவும் சொல்லாமல் இருக்க சந்தேகப்பட்ட எழில் வீட்டிற்கு கிளம்பி வருகிறார். எழில் வீட்டிற்கு வந்ததும் அவரிடம் நடந்ததை அமிர்தா அம்மா சொல்லி அழ ஏன் என்கிட்ட சொல்லல அவனை சும்மா விடக்கூடாது என வெளியில் அமிர்தாவை கூட்டிக் கொண்டு கிளம்புகிறார். சண்டை எல்லாம் வேண்டாம் என எல்லோரும் சொல்லியும் எழில் கேட்கவில்லை. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோ வீடியோவில் அவர்களிடம் சண்டை போட அவர்கள் நீ யாருடா என கேட்க நான் இவங்களோட ஹஸ்பன்ட் என சொல்கிறார். ‌‌

Baakiyalakshmi Serial Episode Update 01.04.22
jothika lakshu

Recent Posts

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…

7 hours ago

அரசன் படத்தில் சமுத்திரக்கனி.. அவரே கொடுத்த அப்டேட்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…

9 hours ago

நீங்கள் யாருடைய ரசிகர்.. அனிருத் சொன்ன க்யூட்டான பதில்..!

தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…

13 hours ago

தலைவர் 173 : ரிலீஸ் எப்போது தெரியுமா?வெளியான சூப்பர் தகவல்.!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…

13 hours ago

சிந்தாமணி போட்ட திட்டம்.. கண் கலங்கிய மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…

18 hours ago

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

1 day ago