சந்தியாவை திட்டிய சிவகாமி.. அர்ச்சனா செய்த செயல்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இது சீரியல் இன்றைய எபிசோட்டில் நேற்று சந்தியா ஆட்டோவில் போகும் போது ஒரு துணியை தவற விட்ட நிலையில் அந்தத் துணியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன் ஆட்டோகாரன் அதை சந்தியாவிடம் கொடுக்க முயற்சித்த நேரத்தில் வெளியே வந்த அவர் உள்ளே உடனே சென்று விடுகிறார். அவருக்கு அடுத்ததாக சிவகாமி யாரிடமோ போனில் பேசிக்கொண்டே வெளியே வந்தபோது அர்ச்சனா குப்பை எடுத்து வரும் போது தவறி கீழே விழுந்து விடுகிறார். நீ வேண்டும் என்றுதான் இப்படி செஞ்ச என அர்ச்சனாவை திட்டுகிறார். அர்ச்சனா வைத்து விடுவதைப் பார்த்த ஆட்டோக்காரர் இந்த அம்மா என்ன இப்படி சத்தம் போடுதே என நினைத்து பேசாமல் இந்தத் துணியை ஒரு ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு சென்று விடலாம் என முடிவு செய்து போகும்போது அந்த துணியை தூக்கி போட்டுவிட்டு சென்று விடுகிறார்.

இந்தத் துணியை பார்த்த சிவகாமி என்ன இது என கையில் எடுத்து பார்க்க அந்த நேரத்தில் அர்ச்சனா வர இது என்னோட பாட்டியோட புடவை சந்தியா கிட்ட துணி தைத்து தர சொல்லிக் கொடுத்தேன் அவ இங்க தூக்கி போட்டுட்டு இருக்கா, என் பாட்டி கூட போடவில்லை இது இங்கு இருக்கறத பார்த்தா அவங்களே இங்கே படுத்துக்கிட்டு இருக்க மாதிரி இருக்கு என அழுது டிராமா போடுகிறார் அர்ச்சனா. உடனே சந்தியாவை கூப்பிட்ட சிவகாமி இந்த துணி உன் கிட்ட தானே கொடுத்தா இது எப்படி இங்கு வந்தது? தைக்கத் தெரியாதுனா தெரியாதுன்னு சொல்ல வேண்டியது தானே எதுக்கு தெருவுல தூக்கிப் போட்டு இருக்க? போலீசுக்கு படிக்கணும்னு சொன்னேன் உனக்கு வீட்டு வேலை செய்ய விருப்பம் இல்லையா அதனால தான் இப்படி பண்ணியா என கண்டமேனிக்கு திட்ட சந்தியா நான் போடல, என் பையில் தான் இருந்தது இது எப்படி இங்கு வந்தது என எனக்கு தெரியாது என சொல்ல சிவகாமி விடாமல் திட்டுகிறார். பிறகு வீட்டில் உள்ளவர்கள் சந்தியாவிற்கு சப்போர்ட் செய்து பேச சந்தியா அழுதுகொண்டே உள்ளே சென்று விடுகிறார்.

அதன்பின்னர் சந்தியா ரூமில் இருக்க சிவகாமி உள்ளே சென்று துணி தைக்க கத்து தரேன், வா என அழைக்கிறார். கிளாசுக்கு போக என்ன செய்வது என சந்தியா தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சரவணன் வந்து கடையில் ஒரு கூட்டம் என சொல்ல சரி சந்தியாவை அழைத்துட்டு போ என அனுப்பி வைத்து விடுகிறார்.

பிறகு கிளாசுக்கு போன சந்தியா தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய சட்ட அமைப்பில் பெண்களுக்காக என்னென்ன சட்டங்கள் இருக்கிறது என்று கூறி தன்னை பற்றி பேசிய ஒவ்வொருவருக்கும் பதிலடி கொடுக்கிறார். இதை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த கோச் பிறகு உள்ளே வந்து சந்தியாவை பாராட்டுகிறார். ஒவ்வொருத்தரும் இந்த வேலைக்காக ஒவ்வொரு கனவோடு வருவாங்க ஆனா சிலர் மட்டும்தான் இந்த சமுதாயத்திற்காக ஏதாவது செய்யணும் என்ற நினைப்போட வருவாங்க, அப்படிப்பட்ட ஆள் தான் இந்த சந்தியா என பாராட்டுகிறார். மேலும் சந்தியாவை பற்றி விசாரித்ததில் இவங்க ஒரு நல்ல மருமகள், ஸ்வீட் ஸ்டால் கடையில தான் அவருக்கு உதவி பண்றாங்க. பிறகு கிடைக்கிற நேரத்தில் தான் இங்கே அடிக்க வராங்க என சொல்லி அனைவரையும் எழுந்து நின்று கைத்தட்டி சொல்கிறார். பிறகு கிளாசிக் எல்லோரும் எழுந்து நின்று சந்தியாவிற்கு கைதட்டி வாழ்த்து கூறுகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌

Raja Rani 2 Serial Episode Update 01.04.22
jothika lakshu

Recent Posts

Ala Bolelo Lyric Video

Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…

10 hours ago

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

11 hours ago

மொத ராத்திரி – திரை விமர்சனம்

வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…

12 hours ago

“கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…

12 hours ago

“தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு” – ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…

12 hours ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து பூரிப்படைந்த சசிகுமார்!

கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…

13 hours ago