ஈஸ்வரி கொடுத்த ஷாக். அதிர்ச்சியில் ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில், அமிர்தா, ஜெனி, ஈஸ்வரி, ராமமூர்த்தி, பாக்கியா என எல்லோரும் நிலா பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்க ஈஸ்வரி எழிலுக்கும் அமிர்தாவுக்கும் கல்யாணம் ஆகி 6 மாதம் ஆகுது, இன்னும் விசேஷம் இல்லையா என கேட்டு சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள சொல்கிறார்.

எழில் அதான் எங்களுக்கு ஏற்கனவே குழந்தை இருக்கே என்று சொல்ல ஈஸ்வரி உங்களுக்குனு ஒரு குழந்தை வேணாமா? குழந்தை பிறந்தா தான் ஒரு பிடிப்பு இருக்கும் என சொல்கிறார். பாக்கியா எழில் படம் பண்ணனும், நல்ல நிலைமைக்கு வரணும் என சொல்ல ஈஸ்வரி சீக்கிரம் குழந்தை பெத்துக்க கண்டிஷன் போட அமிர்தா முகம் மாறி ரூமுக்குள் சென்று விடுகிறார்.

பிறகு எழில் அமிர்தாவிடம் சாரி கேட்டு சமாதானம் செய்ய அமிர்தா பாட்டி அவங்க மனசுல பட்டதை சொல்லிட்டாங்க, விடுங்க என சொல்ல இனிமே இந்த வீட்ல யாரும் இப்படி பேச மாட்டாங்க, அதுக்கு நான் ப்ராமிஸ் பண்றேன் என சொல்கிறார். மேலும் நிலா தான் நம்முடைய பொண்ணு என பேசுகிறார்.

இதையடுத்து பாக்கியா ஈஸ்வரியிடம் சென்று நீங்க இப்படி சொல்லி இருக்க வேணாம் என பேச ஈஸ்வரி கோபம் அடைகிறார். என்ன தான் இருந்தாலும் நிலா எழில் பொண்ணு இல்ல, நாமும் அவ மேல முழுசா உரிமை கொண்டாட முடியாது என்று சொல்ல ஆவேசமாக பேச இதை ராதிகா கேட்டு விடுகிறார்.

முகம் சோகமாக பாக்கியா வெளியே வர ராதிகா உங்க X மாமியார் திட்டுனதை பாக்கும் போது குளுகுளுனு இருக்கு என சொல்லி நக்கல் அடிக்க அந்த நேரம் ஈஸ்வரி கிச்சனுக்கு வந்து இன்னும் எவ்வளவு நேரம் தான் வேலை பார்ப்ப? போய் தூங்குமா என அக்கறையாக பேச பிறகு பாக்கியா ராதிகாவுக்கு பல்பு கொடுக்கிறார்.

அடுத்து ரூமில் கோபி இனியாவுக்கு பாடம் சொல்லி தர மயூ லைட் ஆஃப் பண்ணா தான் தூக்க வரும் வர சொல்ல கோபி அக்கா படிக்கணும்டா என சொல்லி படுத்து தூங்க சொல்ல மயூ படுத்து தூங்க ராதிகா கடுப்பாக உள்ளே நுழைகிறார். இவ்வளவு வெளிச்சத்துல மயூ எப்படி தூங்குவா என ராதிகா கேட்க கோபி இனியா படிக்கணும், இது +2 எக்ஸாம், அவ லைஃப் தீர்மானிக்க போற எக்ஸாம் என கிளாஸ் எடுக்க ராதிகா இன்னும் கடுப்பாகி படுத்து விடுகிறார்.

வேண்டுமென்றே கை போடுவது போல கோபியின் தொடையில் வேகமாக அடித்து அவரை அலற விடுகிறார். கோபிக்கும் தூக்கம் வர போதும் என இனியாவிடம் சொல்ல அவர் 12 மணி வரை படிக்கணும் என சொல்கிறார்.

ஏற்கனவே 11.30 மணியாவதை பார்த்த ராதிகா 12 மணி வரை லைட் ஆஃப் பண்ண மாட்டாங்க என்பதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

15 hours ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

18 hours ago

‘போர்முழக்கம்’ வக்கீலாக களமிறங்கும் வடிவேலு

'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…

18 hours ago

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா பேச்சு

"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…

18 hours ago

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…

18 hours ago

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி!

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…

19 hours ago