baakiyalakshmi-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மற்றும் பாக்கியா இருவரும் கோவிலுக்கு வந்து கொண்டிருக்க எல்லோரும் ஈஸ்வரியை பாராட்டித் தள்ள அவர் சந்தோஷப்படுகிறார்.
இந்த நேரம் பார்த்து அந்த வழியாக வரும் கோபி இதை பார்த்துவிட்டு இதை இப்படியே விடக்கூடாது ஒரு முடிவு கட்டணும் இப்பவே கட்டுறேன் என கோபமாக கிளம்பி வர அந்த ஏரியா பழைய செகரட்டரி கோபியை தடுத்து நிறுத்தி உங்க முன்னாள் மனைவியும் அம்மாவும் ஏரியா முழுக்க ஓவர் பேமஸ் ஆகிட்டாங்க. அதெல்லாம் இருந்தாலும் நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாலியா சந்தோசமா இருக்கீங்க என்று சொல்லி கடுப்பாக்குகிறார்.
பிறகு கோபி அவரை சமாளித்து விட்டு அங்கிருந்து தலை வலிக்குது என சொல்லி கிளம்பி வருகிறார். அதனைத் தொடர்ந்து வீட்டில் கடைக்கு சென்று வந்த ராதிகாவின் அம்மா என்ன எல்லாரும் உன் மாமியார் பத்தி பேசிக்கிட்டு இருக்காங்க என்ன விஷயம் என்று கேட்க ராதிகா வீடியோவை எடுத்துக்காட்ட அதான் விவாகரத்து ஆகிடுச்சுல அப்புறம் இன்னும் என்ன அந்த பாக்கியாவை என் மருமகள்னு மூச்சிக்கு 30 வாட்டி சொல்லிக்கிட்டு இருக்காங்க என்று ஆவேசப்படுகிறார்.
கோபி வீட்டுக்கு வர இவர் இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து அந்த கருமத்தை ஆப் பண்ணுங்க என கடுப்பாக எல்லாம் நீங்க கொடுக்குற இடம் என்று அவர் கோபியை திட்டுகிறார். கோபி இப்பவே நான் எங்க அம்மா கிட்ட பேசுறேன் என்று சொல்லி ரூமுக்கு போக உங்க அம்மா கிட்ட பேசரேனு சொல்லிட்டு உள்ள போறீங்களே என்று ராதிகாவின் அம்மா கேள்வி கேட்கிறார்.
கோபி அது பாக்யாவோட வீடு நான் அந்த வீட்டுக்கு போனா என்னை என்ன வேணும்னாலும் பண்ணிடுவாங்க அதனால நான் போன்ல பேசுறேன் போன்ல ஒன்னும் பண்ண முடியாது இல்ல இப்பவே பேசுறேன் என்று ரூமுக்கு செல்கிறார்.
மறுபக்கம் ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் எல்லோரும் பாராட்டிய விஷயத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்க கோபி போன் செய்ய அவர் எடுக்காத என்று சொல்ல ஈஸ்வரி எல்லாரையும் ஒரே மாதிரி நடத்தணும் நான் பேசுறேன் என்று சொல்வதற்குள் போன் கட் ஆகி விடுகிறது. திரும்பவும் ரிங்கடிக்க ஈஸ்வரி போனை அட்டென்ட் பண்ண கோபி உடனடியா உங்கள பாக்கணும் வெளிய வாங்க நான் வீட்டுக்குள்ள வந்தா பிரச்சனை ஆகும் அவங்க ஏதாவது பேசினா பதிலுக்கு நானும் ஏதாவது பேசுவேன் என்று சொல்லி ஈஸ்வரியை வெளியே வர வைக்கிறார்.
வெளிய வந்த ஈஸ்வரியிடம் காலம் போன வயசுல காலேஜ் கேக்குதா அதுக்கு நீ எதுக்கு சம்மதம் சொன்னீங்க இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று சொல்லி பேச காலேஜ் போறதுல என்ன தப்பு இருக்கு என்று கேள்வி கேட்டு ஈஸ்வரி ஷாக் கொடுக்கிறார். அவளை விவாகரத்து பண்ணிட்ட பிறகு அவளை பத்தி உனக்கு என்ன கவலை என கேள்வி கேட்க நான் அவளை தான் விவாகரத்து பண்ணேன், உங்க யாரையும் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவளால உங்களுக்கு எதுவும் அவமானம் ஏற்படக்கூடாது என்று சொல்ல உன்னால் ஏற்படாத அவமானமா அவளால ஏற்பட போகுது? உன் வாழ்க்கை தான் முக்கியம்னு விட்டுட்டு போன பிறகு பாக்யா எங்களுக்காக எங்க கூட நின்னா, நான் அவளுக்காக அவ கூட நிப்பேன் என்று ஈஸ்வரி சாக் கொடுத்து கோபியை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.
இதையெல்லாம் மேலே இருந்து பார்த்த பாக்யா கண்ணீருடன் ஓடி வந்து உள்ளே வந்த ஈஸ்வரியை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். உண்மையாகவே நீங்க எனக்கு அம்மா தான் என்று கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…