Dharmendra’s Padma Vibhushan Honour Leaves Family Emotional
இந்திய திரைத்துறையின் பழம்பெரும் சூப்பர்ஸ்டாரான தர்மேந்திராவிற்கு மத்திய அரசு அறிவித்த த்ம விபூஷன் விருது, டெல்லியில் உள்ள டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் Droupadi Murmu அவர்களிடமிருந்து, ஹேமமாலினி தனது கணவர் தர்மேந்திராவின் சார்பில் பத்ம விபூஷன் விருதை பெற்றுக்கொண்டார்.
விழாவில் சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், விஜிதா, அஜீதா உள்ளிட்ட குடும்பத்தினர் சில காரணங்களால் நேரில் கலந்துகொள்ள முடியாத நிலையில், குடும்பத்தின் இளைய மகளான அஹானா தியோல் தனது தாயாருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதுகுறித்து ஈஷா தியோல் தனது சமூக வலைதள பதிவில், “மிகவும் பெருமையான மற்றும் உணர்ச்சிகரமான தருணம் இது. குடும்பத்தின் சார்பாக எங்கள் அம்மா விருதைப் பெற்றார். எங்கள் 6 உடன்பிறப்புகளின் பிரதிநிதியாக அஹானா அங்கு நின்று எங்களுக்காக கைதட்டியும், ஆனந்தக் கண்ணீர் வடித்தும் இருந்தார். எங்கள் அப்பாவை மிகவும் மிஸ் செய்கிறோம். அவரைப் பற்றி நினைக்கும் ஒவ்வொரு தருணமும் பெருமையாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தர்மேந்திராவிற்கு கிடைத்த இந்த உயரிய தேசிய அங்கீகாரத்தை, அவரது குடும்பத்தினர் பெருமையுடனும் உணர்ச்சியுடனும் கொண்டாடி வருகின்றனர்.
[Best_Wordpress_Gallery id="1047" gal_title="Blast Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1043" gal_title="Fahadh Faasil and C Prem Kumar New Movie Launch"]
[Best_Wordpress_Gallery id="1041" gal_title="Poo Kaai Kani Movie Pooja Stills"]
[Best_Wordpress_Gallery id="1039" gal_title="Athiradi Movie Pre Release Event"]
[Best_Wordpress_Gallery id="1037" gal_title="Sattendru Maarudhu Vaanilai Pre-Release Event"]