கோபிக்கு வந்த கனவு. பழனிச்சாமியால் அதிர்ச்சி அடைந்த கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் அந்த விஷயம் தெரிந்தால் நீ ஷாக் ஆகிடுவ என்று சொல்லி பாக்யாவுக்கு கல்யாணம் என சொல்ல ராதிகா அதை நம்ப மறுக்க கோபி முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன், ஆனா உண்மையாவே பாக்கியாவுக்கு கல்யாணம் என சொல்லி புலம்புகிறார்.

அதன் பிறகு கோபியின் பதற்றத்தை பார்த்த ராதிகா சரி பாக்யாவுக்கு கல்யாணம்னே வச்சுக்கலாம் நீங்க எதுக்கு இப்படி வருத்தப்படுறீங்க இன்னும் உங்களுக்கு பாக்கியா மேல காதல் இருக்கா என்று கேட்க அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது காதலும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அவ யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு என்ன என்பது போல கோபி நடிக்கிறார். என் மனசு முழுக்க நீ மட்டும் தான் இருக்க என சொல்லி படுத்து தூங்க பாக்கியா பழனிச்சாமிக்கு காபி எடுத்து வந்து கொடுப்பது போல கனவு கண்டு அலறி எழுந்துக் கொள்கிறார்.

பிறகு தண்ணீர் குடிக்க வாட்டர் பாட்டில் எடுக்க அதில் தண்ணீர் இல்லாததால் கீழே இறங்கி சென்று பாக்கியா பட்டுப்புடவை கட்டி தலையில் மல்லிகை பூ நிறைய வைத்து படுத்துக் கொண்டிருப்பதை பார்த்து இதெல்லாம் நல்லாவே இல்ல ரொம்ப மாறிட்ட என கோபி பாக்யாவை பார்த்து பேசிக் கொண்டிருக்க தூக்கத்தில் இருக்கும் அவர் கண் விழித்து அலற கோபி நான் தான் என சொல்ல நீங்க இங்க என்ன பண்றீங்க என சத்தம் போட கோபி குடிக்க தண்ணி எடுக்க வந்ததாக சொல்லி கிச்சனுக்கு சென்று தண்ணீர் எடுத்துக்கொண்டு மேலே சென்று விடுகிறார்.

அங்கு ராதிகா எழுந்து உட்கார்ந்து கொண்டிருக்க கோபியை பார்க்க கோபி ராதிகாவை பார்த்து அதிர்ச்சி அடைய அவர் உங்களுக்கு பாக்யாவுக்கு கல்யாணம் என்று சொன்னதை ஏத்துக்க முடியல என்று சண்டை போட என் மனசுல நீ மட்டும் தான் இருக்க என் மனசை கிழிச்சு காட்டுனா கூட அதுல ராதிகானு தான் இருக்கும் என்று சொல்கிறார்.

மறுநாள் காலையில் எழில் டிபன் சாப்பிட வர பாக்கியா பரிமாறி கொண்டு இருக்க அப்போது அவர் அமிர்தாவிடம் அப்படி ஒரு காபி என சொல்ல இதைக்கேட்ட பாக்கியா நெஞ்சை பிடித்துக் கொண்டு ஐயோ நெஞ்சு வலிக்குது என கத்துகிறார். எழில், அமிர்தா இருவரும் பதற என்கிட்ட காபி கேட்ட என் பையன் கல்யாணத்துக்கு அப்புறம் மாறிட்டான் என பாக்கியா புலம்ப பிறகு அது நடிப்பு என தெரிந்து எழில் கலாய்க்கிறார்.

அதை தொடர்ந்து கோபத்தோடு கோபி பழனிச்சாமி வீட்டுக்கு வர பாடி கார்டு மீது மோதி மிரண்டு நிற்க அவர்கள் என்ன வேணும் யாரை பார்க்கணும் என கேட்க பழனிச்சாமியை பார்க்க வேண்டும் என சொல்லி உள்ளே போகிறார். கோபியை பார்த்த பழனிச்சாமி அவரை பேச விடாமல் வரவைத்து காபி குடிங்க என்று சொல்லி வேலைக்கார பெண்ணிடம் காபி போட்டு வர சொல்லி இப்ப சொல்லுங்க என்ன விஷயம் என கேட்கிறார்.

நீங்க எதுக்கு என் மனைவி கிட்ட அடிக்கடி பேசுறீங்க என கோபி சத்தம் போட பழனிச்சாமி உங்க மனைவியா? யார் அது? நான் பார்த்ததே இல்லையே? என்று நக்கல் அடிக்கிறார். பிறகு நான் பாக்கியாவை தான் சொல்றேன், அவகிட்ட நீங்க எதுக்கு அடிக்கடி பேசுறீங்க? என்று கேட்க பழனிச்சாமி நாங்க கிளாஸ்மேட் ஒண்ணா படிக்கிறோம், பிரண்ட்ஸ் அப்படி இருக்கும்போது பேசிக்காமல் எப்படி இருக்க முடியும் என பதில் கொடுக்கிறார்.

அதெல்லாம் இருக்கட்டும் பெண் பார்க்க எதுக்கு வந்தீங்க என்ற கோபி கேட்க ஒரு வீட்டில பெண் இருந்தால் பார்க்க வரத்தான் செய்வாங்க அதுவும் அழகா அம்சமா பொண்ணு இருந்தா பாக்கத்தான் செய்வாங்க என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

14 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

14 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

14 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

14 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

14 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

14 hours ago