Sirakadikka Aasai Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாவும் முத்துவும் ஊரைச் சுற்றி பார்த்துக் கொண்டிருக்க திடீரென வண்டி பஞ்சர் ஆகிவிட இருவரும் வண்டியை தள்ளிக் கொண்டு செல்லும் போது ரோகிணியின் வீட்டின் வழியாகச் செல்லும்போது க்ரிஷ் மீனாவை பார்த்து வீட்டுக்கு வாங்க என கூட்டி செல்கிறான்.
பிறகு மீனாவை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு முத்து வண்டிக்கு பஞ்சர் போட கிளம்பி விட மீனாவும் கிரிஷ்ஷூம் விளையாடிக் கொண்டிருக்கும் போது ரோகிணி அவருடைய அம்மாவுக்கு போன் செய்கிறார். போன் எடுத்த அவருடைய அம்மா அவன் வளர்ந்துட்டான் இப்போ நிறைய கேள்வி கேட்கிறான் நீ தான் அம்மான்னு அவனுக்கு சொல்லிடு என சொல்ல ரோகிணி இதுக்கு தான் நான் போன் பண்றது இல்ல என திட்டுகிறார்.
பிறகு கிருஷ் இடம் போன் குடுக்க சொல்ல அவன் அத்தை கிட்ட பேச மாட்டேன் கோபமா இருக்கேன் என சொல்கிறான். அதை நீயே சொல்லிடு என போன் குடுக்க அவன் ரோகினியிடம் நீங்க நான் போன் பண்ணும் போது எடுக்கல, அதனால நான் உங்க மேல கோவமா இருக்கேன்னு சொல்லு அத்தை வேலையா இருந்தேன் என்று சொல்லி சமாளிக்கிறார். அதன் பிறகு அவன் சரி கெஸ்ட் வந்து இருக்காங்க நான் உங்க கூட விளையாட போறேன் என சொல்லி போனை கொடுத்துவிடு ரோகிணியின் அம்மா மீனா வந்திருக்கும் விஷயத்தை சொல்கிறார்.
யாருன்னு தெரியாதவங்களை எல்லாம் வீட்டுக்குள்ள விட வேண்டாம் என்று சொல்லி ரோகினி போனை வைக்கிறார். அதன் பிறகு முத்து வீட்டுக்கு வந்து விட மீனாவை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார்.
மறுபக்கம் பார்வதி விஜயா ரோகினிக்கு எப்படி நகை போடுவது என பேசிக்கொண்டு இருக்க மனோஜ் வேலை போன விஷயத்தை சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். ரோகிணி தான் அத்தை கிட்ட இத சொல்ல வேண்டாம் அவங்க ஏற்கனவே நிறைய டென்ஷன்ல இருக்காங்க என்று சொன்னதாக சொல்ல பார்வதி நான் பார்த்து வச்ச பொண்ணு உன் மேல எவ்வளவு பாசமா இருக்கா பாரு என கூறுகிறார்.
மனோஜ் ரோகிணி நல்ல பொண்ணு அவளுக்கு நாம செய்ய வேண்டியது செய்யணும் என சொல்ல விஜயா உனக்காக உன்னுடைய பாட்டி கிட்ட போய் கையேந்தி நிற்கப் போறேன் என சொல்ல மனோஜ் நன்றி சொல்கிறான்.
மறுபக்கம் முத்து உடம்பு சூடாகிடுச்சு என்று பாட்டியிடம் எண்ணெய் தேச்சு விட சொல்ல பாட்டி மீனாவை தேய்க்க சொல்ல முத்து பாட்டி சொன்னா நீ வந்துடுவியா என திட்ட மீனா நீங்களே தேச்சுக்கோங்க என சொல்லி கொடுத்துவிட்டு உள்ளே சென்று விடுகிறார். பிறகு பாட்டியிடம் முத்து பற்றி சொல்லி வருத்தப்பட அந்த பச்சையம்மன் அவன மாத்துவா நீங்க இன்னைக்கும் கோவிலுக்கு போயிட்டு வாங்க என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…