சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது – சனம் ஷெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை சனம் ஷெட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “இது மாணவர்களுக்கான போராட்டம் என்பதால், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே இங்கு வந்துள்ளேன். இந்த மேடையை அரசியலுக்காக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஜோக்கர்ஸ். நான் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை. நேற்று ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்துவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன்” என்றார்.

இதற்கு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். உடனே சனம் ஷெட்டி, “இது ஜனநாயகம் அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சுரிமை இருக்கிறது. நான் என்ன பேசுகிறேன் என்பது உங்களுக்கு புரிகிறதா?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மாணவர்கள் கோஷம் எழுப்பிய நிலையில், சனம் ஷெட்டியிடம் இருந்த மைக் பறிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, “மாணவர்களுக்கான போராட்டம் என்று கூறித்தானே என்னை அழைத்தார்கள். ஜனநாயகத்துக்காக போராடுவதாக கூறுகிறார்கள். ஆனால் நான் பேசிக்கொண்டிருக்கும்போதே வந்து மைக்கை பிடுங்கிவிட்டார்கள். இதுதான் ஜனநாயகமா?

பொதுமக்களில் ஒருவராக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே இங்கு வந்தேன். இந்த மேடையை அரசியலுக்காக பயன்படுத்தினால் அதற்கு நான் ஆதரவு தெரிவிக்க மாட்டேன். இவர்கள் ஜனநாயகத்துக்காக போராடவில்லை. ஒரு குறிப்பிட்ட அஜெண்டாவை வைத்துதான் போராடுகிறார்கள். இந்த பொறிக்குள் யாரும் விழுந்துவிட வேண்டாம்.

பேசுவதற்கான சுதந்திரத்தை வழங்காதவர்கள், சுதந்திரத்துக்காக போராடுகிறார்களா? இது ஒரு போலியான போராட்டம்” என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “டெல்லியில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. நான் அங்கு செல்லவில்லை. மாணவர்களுக்கு 100 சதவீதம் சல்யூட் அடிக்கிறேன். சோனம் வாங்சுக்குப் பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அவரை காந்திக்கு நிகராக பார்க்கிறேன். மாணவர்களின் காலில் விழுந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால், இங்கு நடைபெறும் போராட்டம் போலியானது” என சனம் ஷெட்டி தெரிவித்தார்.

Suresh

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

1 day ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

1 day ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

1 day ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

1 day ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

1 day ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

1 day ago