ராதிகா குடும்பம் செய்த வேலை.. கடுப்பாகி புலம்பும் கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட் ஹோட்டல் சாப்பாட்டை பரிமாற எல்லோரும் சாப்பிட்டு நல்லா இருக்கு ஆனா நீ தான் சமைச்சியா என்ன சந்தேகமா இருக்கு என பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

அப்படியே இந்த பக்கம் கோபி ராதிகாவின் வீட்டில் குளித்துவிட்டு டவல் கேட்டு ராதிகாவுக்கு குரல் கொடுக்க ராதிகா அவருடைய அம்மா அண்ணா என எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். கோபியின் குரலைக் கேட்டு எந்த ஒரு பதிலும் வரவில்லை. காட்டு கத்து கத்தும் கோபி அதன் பிறகு அவரே டவலை தேட அதுவும் கிடைக்காமல் தன்னுடைய வேஷ்டியிலேயே தலையை துவட்டிக் கொள்கிறார்.

கீழே வரும் கோபியையும் யாரும் கண்டு கொள்ளவில்லை ஒரு மாப்பிள்ளை மரியாதையே இல்லை என கோபி மனதுக்குள் புலம்புகிறார். பிறகு கோபி காபி கேட்க வாயில் வைக்க முடியாத அளவிற்கு டீ போட்டு வந்து கொடுக்கிறார் ராதிகாவின் அம்மா. கோபி வீட்டில் அதிகாரத்தோடு நடந்து கொண்டதையும் இங்கு நடப்பதையும் ஒப்பிட்டு பார்த்து புலம்புகிறார்.

அடுத்து ராதிகா மேலே வர கோபி பேச முயற்சி செய்ய ராதிகா என்ன உங்க வீட்ல இருக்காங்க எவ்வளவு அசிங்கப்படுத்தினாங்க, நான் என்ன தப்பு பண்ண நானா உங்கள உங்க பொண்டாட்டி கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்தேன்? நீங்கதானே உங்க குடும்பம் பிடிக்கலன்னு பிரிஞ்சு வந்தீங்க? சட்டப்படியும் நியாயப்படியும் நான் எந்த தப்பும் பண்ணல, என்ன அசிங்கப்படுத்துற எல்லார் முன்னாடியும் நல்லபடியா வாழ்ந்து காட்டணும் எனக்காக அது பண்ணுங்க அது போதும் என கூறுகிறார். கோபி செய்வதறியாது நிற்கிறார்.

இந்த பக்கம் இனியா ஸ்கூலுக்கு போன பிறகு ஜெனி பாக்யாவிடம் அங்க அங்கிளை பார்த்ததும் உங்களுக்கு ஒரு மாதிரி இல்லையா என கேட்க எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பழகிடுச்சு போல என கூறுகிறார். பிறகு பாக்கியா சமைப்பதற்காக திறக்க உள்ளே இருந்து ஹோட்டல் கவர்களை பார்த்து என்ன இது என கேட்க ஜெனி அதிர்ச்சி அடைகிறாள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

11 hours ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

11 hours ago

Coffee Day Kadhal Video Song

Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…

12 hours ago

‘பாட்ஷா 2, பேட்ட 2’ படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? – ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…

16 hours ago

குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை! – நடிகை வரலட்சுமி சரத்குமார்

கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…

16 hours ago

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

16 hours ago