கோபியிடம் சவால் விட்ட பாக்கியா.. கோபத்தில் குடும்பத்தினர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி 40 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வை நான் இந்த வீட்டை விட்டு வெளியே போகிறேன் என சொல்ல பொறுமை இழந்த பாக்கிய அந்த 40 லட்சம் ரூபாய் பணத்தை நான் தருகிறேன் என கூறுகிறார். நாலாயிரம் நாற்பதாயிரம் இல்ல 40 லட்சம் அதுக்கு எத்தனை சைபர்னு உனக்கு தெரியுமா? என கோபி மக்களாக பேச எனக்கு உங்கள மாதிரி நக்கலா பேச தெரியாது உங்களுக்கு தேவை 40 லட்சம் பணம் தானே அதை நான் தரேன் என சொல்ல எப்படி தருவ? எப்போ தருவ என கேட்க எப்படி தருவேன் எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா எண்ணி ஒரே வருஷத்துல அந்தப் பணத்தை நான் தருவேன் ஒருவேளை ஒரு வருஷத்துல தர முடியலன்னா நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்.

நீங்க இத நம்பாம கூட போகலாம் போயிட்டு பாண்டு பேப்பரை வாங்கிட்டு வாங்க கையெழுத்து போட்டு தரேன் என சொல்ல ஈஸ்வரி பாக்யா நீ தப்பு மேல தப்பு பண்ற என சொல்ல பணம் கேட்டது நான் இல்லையே அத்தை அவர் கேட்டாரு நான் தரேன்னு சொல்றேன் என கூறுகிறார்.

பிறகு கோபி 40 லட்சம் ரூபாய் பணத்தை ரெடி பண்ணிட்டு சொல்லு அப்போ மீட் பண்ணலாம் என சொல்லி வீட்டை விட்டு வெளியே செல்ல இனியா, செழியன், ஈஸ்வரி என எல்லோரும் தடுத்து நிறுத்த கோபி வீட்டை விட்டு வெளியே கிளம்பி விடுகிறார்.

பிறகு உள்ளே வந்த ஈஸ்வரி நீ தப்பு மேல தப்பு பண்ற என்னால இதை ஏத்துக்கவே முடியாது. கோபி இந்த வீட்ல இருக்கணும். நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும்னு தான் நான் ஆசைப்பட்டேன் என கூறுகிறார். ஆனா நீ பிடிவாதமா நீ நெனச்சத சாதித்து விட்டாய்? திரும்பவும் கோபி இந்த வீட்டுக்குள்ள வர வரைக்கும் நீ என்கிட்ட பேசாத நானும் உன்கிட்ட பேசமாட்டேன் என கூறுகிறார். செழியன் இப்போ உங்களுக்கு சந்தோஷமா நிம்மதியா இருங்க என சொல்லிவிட்டு மேலே செல்கிறான். இனியா எனக்கு அப்பனா ரொம்ப பிடிக்கும் அப்படி இருக்கும்போது அவரை ஏன் வெளியே அனுப்பிட்டேன் எனக்கு உன்னை பிடிக்கவே இல்லை என சொல்லி அழுது கொண்டே மேலே செல்கிறார்.

ரோட்டுக்கு வந்த கோபி கடும் கோபத்தில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார் பிறகு தன்னுடைய நண்பர் சதீஷை வரவைத்து அவரிடம் நடந்த விஷயத்தை சொல்ல அவர் கொஞ்சம் பொறுமையாக இரு யோசித்து முடிவு பண்ணு என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் கோபி ராதிகா வீட்டுக்கு சென்று உன்னை திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக நடுரோட்டில் நிற்கிறேன். எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீ தான். நீயும் கைவிட்டாத என பேசுகிறார்.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

1 hour ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

1 hour ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

2 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

2 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

2 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

2 hours ago