செழியன் மீது கோபத்தில் ஈஸ்வரி,பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா இனியாவை பிடித்து திட்டுகிறார். இனியா சாரி மா பிரெண்ட்ஸ் கம்பெல் பண்ணாங்க, அதனால தான் போனேன் என்று சொன்னதும் பிரான்ஸ் கம்பெல் பண்ணா உனக்கு அறிவு எங்க போச்சு என்று திட்டுகிறார்.

நம்முடைய நல்ல நேரம் எதுவும் ஆகல ராதிகா மட்டும் அங்கு வரலைன்னா நீ எங்க இருந்திருப்ப? நாளைக்கு உனக்கு காலேஜ்ல டிசி கொடுத்து இருப்பாங்க இதெல்லாம் உனக்கு தேவையா என்று கோபப்படுகிறார்.

நீ எங்க போனாலும் உன் கூடவே வந்து நீ என்ன பண்றன்னு பார்த்துட்டே இருக்கணுமா? போகக்கூடாதுன்னு சொன்னா நாங்க பழைய ஆளா தெரிவோம் நம்பி அனுப்பி வச்சா இந்த மாதிரி பிரச்சனையை கொண்டு வருவீங்க நாங்க என்னதான் பண்றது என தலையில் அடித்துக் கொள்கிறார்.

ஈஸ்வரி எல்லாத்துக்கும் இவன் தான் காரணம் என்று செழியனை திட்டுகிறார். செழியன் நீங்க பயப்பட கூடாதுன்னு தான் சொல்லாமல் இருந்திருப்பான் என்று எழில் சொல்ல ஈஸ்வரி கோபப்பட்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.

மறுபக்கம் வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவிடம் என்னாச்சு என்ன பிரச்சனை என்று கேட்க ராதிகா பதில் சொல்லாமல் அமைதியாகவே இருக்க பாக்கியா வீட்டிற்கு கிளம்பி வர கதவு பூட்டி இருப்பதை பார்த்து இனியாவுக்கு போன் செய்கிறார்.

அதன் பிறகு இனியா போன் சுவிட்ச் ஆப் என வருவதை பார்த்து செழியனுக்கு போன் போட்டு விசாரிக்க வெளிய வந்த செழியன் நடந்த விஷயத்தை சொல்ல வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவை நினைத்து பெருமைப்படுகிறார். பிறகு ராதிகாவுக்கு நன்றி சொல்ல ரூம் கதவைத் தட்ட ராதிகா திறக்காமல் அமைதியாகவே இருக்கிறார்.

அடுத்து பாக்யா தண்ணீரை எடுத்துக் கொண்டு ரூமுக்கு வர அழுது கொண்டு இருந்த இனியா கண்களை துடைத்துக் கொண்டு தூங்குவது போல் இருக்க பாக்கியா இனியாவின் தலையை கோதி விட இனியா கண் திறந்து அம்மாவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.

பிறகு மீண்டும் மன்னிப்பு கேட்க பாக்கியா பிரண்ட்ஸ் கூப்பிட்டாங்கன்னா எங்க வேணாலும் போய்டுவியா நாளைக்கு விஷத்தை கொண்டு வந்து கொடுத்து கம்பல் பண்ண குடிச்சிடுவியா என்று திட்டுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

5 minutes ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

9 minutes ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

12 minutes ago

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

1 hour ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

1 hour ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

1 hour ago