Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இனியாவால் வருத்தத்தில் கோபி.. சோகத்தில் குடும்பத்தினர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா அமைதியா இருக்க படுத்து எதுவும் பேசாமல் யோசனையில் இருக்க எழில் நீ ரொம்ப நல்ல, அப்பா இப்படி கேவலமா நடந்து அவருடைய தரத்தையே குறைச்சிக்கிட்டாரு. இதுக்குத்தான் உன்கிட்ட பலமுறை சொன்னேன் அப்பாவ மறந்திடு நாம எல்லோரும் சந்தோஷமா இருக்கலாம்னு சொன்ன ஆனா நீ தான் கேட்கல என பேசுகிறார். பிறகு செல்வி டீ போட்டு எடுத்து வந்து கொடுத்து பாக்கியவை குடிக்க வைக்கிறார்.

அதன் பிறகு அங்கிருந்து வீட்டுக்கு வந்த செல்வி பாக்கியா அக்கா ஆபீஸில் தான் இருக்கிறது என்ற விஷயத்தை கூறுகிறார். கட்டுன புடவையோட அப்படியே இருக்கு மாத்திக்க ஒரு ரெண்டு புடவை கொடு என இனியாவிடம் கேட்டு வாங்கி செல்கிறார். இனியா அம்மாவை சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்லுங்க என சொல்லி அனுப்புகிறார்.

பிறகு இனியா கோபியின் ரூமுக்கு சென்று நீங்க இப்படி பண்றீங்க நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல டாடி உங்களுக்கு அம்மாவை பிடிக்காதுன்னு தெரியும் என்னையும் உங்களுக்கு பிடிக்காது தானே என கூறுகிறார். சத்தியமா நான் ஒரு நாளும் அப்படி நினைச்சது இல்ல உன்ன விட்டு போகணும்னு கூட நினைச்சது இல்லை என கோபி கூறுகிறார். ஒருவேளை நான் இந்த வீட்டை விட்டு போயிருந்தா கூட உன்னை கூட்டிட்டு தான் போயிருப்பேன் என சொல்ல இனியா கண்டிப்பா நான் வந்து இருக்க மாட்டேன், அம்மா ரொம்ப பாவம் அவங்கள நீங்க ரொம்ப கஷ்டப்படுத்திட்டீங்க உங்களை எனக்கு பார்க்கவே பிடிக்கல என கூறுகிறார். இதுக்காகத்தான் அன்னைக்கு நீங்க என்கிட்ட அப்படி கேட்டீங்களா என இனியா கேட்கிறார்.

இனிமே நான் உங்ககிட்ட எப்பயும் பேசவே மாட்டேன் நீங்களும் என்கிட்ட பேச வேண்டாம் என சொல்லிவிட்டு இனியா வெளியே செல்ல கோபி வருத்தப்படுகிறார். கீழே ஜெனி தாத்தா பாட்டி சாப்பிட வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வந்த செழியன் பாக்கியா பற்றி பேசி வருத்தப்படுகிறார். அப்பா இப்படி பண்ணுவார் என்று கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என கூறுகிறார். ஈஸ்வரி செழியன் மீது சாய்ந்து கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update