தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா உங்க அம்மா வந்தாதான் உங்களை விடுவேன் என்று செழியன் மற்றும் இனியாவை தடுத்து நிறுத்த அவர்கள் இருவரும் அம்மாவுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினையாகுது என்று கெஞ்சுகின்றனர்.
ஆனால் ராதிகா பாக்கியா இங்க கண்டிப்பா வரணும் என்று சொல்ல வேறு வழியின்றி செழியன் போன் செய்ய ராதிகா ஃபோனை வாங்கி உங்க பொண்ணு பப்புக்கு வந்து இருக்கா போலீஸ் அவள அரெஸ்ட் பண்ண இருந்தாங்க என்ற விஷயத்தை சொல்லி அதிர வைக்கிறார்.
பிறகு உடனடியா நீங்க கிளம்பி வரணும் என்று சொல்ல பாக்கியா பதறிப் போய் ஈஸ்வரியிடம் விஷயத்தைச் சொல்ல ஈஸ்வரி நானும் வரேன் என்று சொல்லி போட்டியிலிருந்து கிளம்பி வருகின்றனர். செல்வி தனியாளாக பாக்கியா டீமுக்காக சமையல் வேலைகளை செய்கிறார்.
பிறகு பாக்கியா ஈஸ்வரி என இருவரும் பப்புக்கு வந்து இறங்கியதும் ராதிகா காரில் இருக்கும் இனியாவை பார்த்து என்னாச்சு என்று கதவை திறக்க தடுத்து நிறுத்தும் ராதிகா உங்க பொண்ணு அவளோட சீனியர்ஸ் கூட சேர்ந்து பப்புக்கு வந்து குடிச்சிருக்கா.. கலாட்டா பண்ணியிருக்கா போலீஸ்க்கு கம்ப்ளைன்ட் போகவே அவங்க வந்து கைது பண்ணி கூட்டிட்டு போக இருந்தாங்க. அந்த நேரம் பார்த்து நான் இங்க வரவே போலீஸ்கிட்ட பேசி கஷ்டப்பட்டு அவளை காப்பாத்தி இருக்கேன்.
நான் நெனச்சிருந்தா கண்டும் காணாமல் கூட போய் இருக்கலாம் அப்படி போயிருந்தா போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இருப்பா.. பேப்பர்ல செய்தி வந்திருக்கும், கோர்ட்டுக்கு போய் தான் கூட்டி வந்து இருப்பீங்க என்று அதிர வைக்கிறார். வயசு பொண்ணை ஒழுங்கா வழங்க என்று அட்வைஸ் கொடுக்க பாக்கியா நன்றி சொல்ல ராதிகா கிளம்பி செல்கிறார். மீண்டும் இதுதான் ராதிகாவுக்கும் பாக்கியாவுக்கும் இருக்க வித்தியாசம் என்று மயூவை கோட்டுக்கு அழைத்துச் சென்றதை பற்றி பேசி குத்தி காட்டுகிறார்.
தலையில் அடித்து அழும் பாக்கியா செல்வி போன் பண்ண இனியா கொடுக்க முடியாத பரிசு கொடுத்ததாக நொந்து போய் பேசுகிறார். ஈஸ்வரி அம்மாவை நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களா என்று இனியாவை போட்டு அடிக்கிறார். பாக்கியா பாதியில் கிளம்பி சென்றதால் காரணம் புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் கோபி. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…