Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வார்னிங் கொடுத்த போலீஸ், கண் கலங்கிய பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் ஈஸ்வரி குறித்து விசாரிக்க குடும்பத்தினர் யார் கம்ப்ளைன்ட் கொடுத்தது எனக்கு கமலா என்ற பெயரை சொல்ல செல்வி ராதிகாவோட அம்மா என்று சொன்னது எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு நாளைக்கு ஈஸ்வரி வந்ததும் தகவல் கொடுக்கணும் இல்லன்னா நாங்களே அவங்கள கைது பண்ணி கூட்டிட்டு வர மாதிரி இருக்கும் என வார்னிங் கொடுத்துவிட்டு கிளம்புகின்றனர். இதையடுத்து செல்வி ராதிகாவையும் அவரது அம்மாவையும் பிடித்து திட்டுகிறார்.

மறுபக்கம் பாக்கியா ஈஸ்வரி என எல்லோரும் சந்தோஷமாக இருக்க இங்கே பாக்யாவின் குடும்பத்தினர் அடுத்து என்ன செய்வது என யோசிக்கின்றனர். ஆன்ட்டிக்கு இந்த விஷயம் தெரியனும் என்று ஜெனி சொல்ல செழியனும் ஆமாவுக்கு சொல்லலாம் என்று சொல்ல எழில் வேண்டாம் என்று மறுக்கிறான். அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப பயப்படுவாங்க என்று சொல்ல செழியன் சொல்லலனா ரொம்ப பதறிடுவாங்க, அது அவங்களுக்கு ஷாக்கிங்கா இருக்கும் என்று சொல்லி போன் செய்கிறான்.

போனை எடுத்த பாக்கியா எள்ளை பற்றி பேச செழியன் அவ கதை சொல்ல போகல இங்க வேற ஒரு பிரச்சனைமா நீ கொஞ்சம் தனியா வா.. நான் சொல்றத கேட்டு பதறாதே என்று சொல்லி விஷயத்தை சொல்ல பாக்யா உச்சகட்ட அதிர்ச்சி அடைகிறார். ஈஸ்வரி உட்பட எல்லோரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து இந்த விஷயத்தை எப்படி சொல்றது என்று தெரியாமல் தவிக்கிறார்.

மறுபக்கம் ராதிகா வந்ததும் கமலா கோபி பேசியதையும் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்ததையும் சொல்ல ராதிகா ஏமா இப்படி பண்ண என்று பதற கமலா நான் செஞ்சது தான் சரி அந்த அம்மா ஜெயிலுக்கு போகணும் அப்பதான் மாப்பிள்ளைக்கு புத்தி வரும் என்று சொல்கிறார்.

பிறகு கும்பகோணத்தில் இருந்து பாக்யா உட்பட எல்லோரும் ஊருக்கு கிளம்பி வர ஈஸ்வரி நல்ல தூக்கம் வருது என்று நிம்மதியாக தூங்க பாக்கியா சென்னைக்கு போனதும் நடக்கப்போவது என்னன்னு தெரியலையே என்று கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Baakiyalakshimi serial episode update
Baakiyalakshimi serial episode update