baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் போஸ்ட் மேன் இடம் இருந்து ரிஜிஸ்டர் போஸ்ட்டை வாங்கிய கோபி அப்படியே மிரண்டு போயிருக்க அவரை உள்ளே அழைக்கிறார் ஈஸ்வரி. உள்ளே வந்த கோபியின் கையில் இருந்த லெட்டரை பிடுங்கி இது என்ன என படி என்று கூறுகிறார் பாக்யா. லெட்டரை படித்து கோர்ட்டில் இருந்து வந்திருப்பதாக சொல்ல ஈஸ்வரி பாக்யா சொல்லும் போது கூட நீ தப்பு பண்ணி இருப்பேன் நம்பல ஏன் இப்படி பண்ண என அவரை பளார் என அழைக்கிறார். இப்ப கூட இந்த விஷயம் தெரியலன்னா ராதிகாவை போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருப்பியா என ஈஸ்வரி அறையே அம்மா அப்படியெல்லாம் இல்லை என கோபி சொல்ல பேசாத என்கிட்ட பேசவே பேசாத என அழுது புலம்புகிறார்.
உன்ன எத்தனையோ பேர் கிட்ட பெருமையா பேசி இருக்கேன் உன் பிள்ளைகளுக்கு உன்ன உதாரணமா சொல்லி இருக்கேன் ஆனா இப்ப அவங்க முன்னாடி இப்படி அசிங்கப்பட்டு இருக்கிற இனி உன்னோட பேச்சை எப்படி அவங்க கேட்பாங்க என கதறுகிறார். இனியா ஒரு பக்கம் பாட்டியை பிடித்துக் கொண்டு கதறி அழுகிறார்.
பிறகு கோபியின் அப்பா தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் கோபி தான். ராதிகாவுடன் இவனுக்கு பழக்கம் இருப்பது ஏற்கனவே தெரியும். இவன்கிட்ட போய் இதெல்லாம் குடும்பத்துக்கு ஒத்து வராது விட்டுடு குடும்பம் சிதைந்து போயிடும்னு சொன்னேன் ஆனா இவன் கேட்கல. ராதிகா வீட்டுக்குள் போய் சத்தம் போட்டுட்டு வந்தேன் அவளும் இவனை விடுற மாதிரி தெரியல. இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும்னு இவன்கிட்ட மேல போய் பேசிட்டு வரும்போதுதான் மாடியில் இருந்து உருண்டு கீழே விழுந்து எனக்கு இப்படி ஆயிடுச்சு. எனக்கு இப்படி ஆனது சந்தோஷப்பட்ட முதல் ஆள் இவனாகத்தான் இருப்பான் என சொல்கிறார்.
பிறகு இனியா அவ்வளவு கெஞ்சியும் இவர் தீம் பார்க் வரவில்லை. ஆனா அந்த குடும்பத்தோட இவர் அங்க வந்திருந்தார் அதனால் பார்த்தேன் ஆனா அன்னைக்கு எனக்கு ராதிகா என்று தெரியாது. இதையெல்லாம் எதுவும் வெளிய சொல்ல முடியாமல் தான் இவர என்னுடைய படத்துக்கு கூப்பிடல. ஆனா நீங்க எல்லோரும் என்ன திட்டினீங்க என எழில் கூறுகிறார்.
பிறகு பாக்கியா பிடிக்காத வாழ்க்கை பிடிக்காத வாழ்க்கைன்னு சொல்லிட்டு நீங்க இந்த வீட்ல சந்தோசமா சுதந்திரமா நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருந்தீங்க. ஆனா 25 வருஷமா நான் தான் என் வாழ்க்கையே தொலைச்சி இருக்கேன். எத பண்ணாலும் குற்றம் சொல்லி வெறுப்பு மட்டுமே காமிக்கிற புருஷன் கூட வாழ்வது எவ்வளவு வலினு உங்களுக்கு தெரியுமா.? இத்தனை வருஷத்துல இந்த வீட்ல யாரு கிட்டயாவது நான் இதை சொல்லி புலம்பி இருப்பேனா? என்னுடைய குழந்தைகளுக்காக வாழனும்னு தான் நான் வாழ்ந்துட்டு இருந்தேன்.
என் குழந்தைகளுக்காகத்தான் கஷ்டப்படுறேன் என நீங்க சொல்லுவீங்க ஏன் நான் படலையா? நான் சம்பாதித்து எடுத்துட்டு வந்து உங்ககிட்ட அவ்வளவு சந்தோஷமா கொடுப்பேன், ஆனா நீங்க சீன் போடறியா பந்தா காட்டுறியா என என்னை அசிங்கப்படுத்துவீங்க. உனக்கு நாலு பேர் முன்னாடி எப்படி நடந்துக்கணும்னு தெரியல, நாகரீகமா பேச தெரியல, சாப்பிட தெரியலன்னு சொல்லுவீங்க. இப்ப நீங்க பண்ணது மட்டும் நாகரிகமா என கேட்க கோபி அதிர்ச்சடைகிறார்.அதன் பின்னர் வெளியான நாளைய ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி இவ உன்ன விட்டுட்டு போயிடுவானா என பேச எனில் நீ தைரியமா முடிவெடு உன் கூட நான் இருப்பேன் என சொல்ல பாக்கியா இனி நான் ஒரு ஏமாளியா இந்த வீட்ல இருக்க மாட்டேன் என சொல்லி வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார்.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…