தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி பாக்கியாவிடம் பணத்தை கொடுக்க அவர் அன்புக்கு விலை பேசாதீங்க என்று சொல்ல பழனிச்சாமி சந்தோஷப்படுகிறார்.
மறுபக்கம் விமல் செல்வி இருக்கும் இடத்திற்கு வந்து நைசாக அவருடைய போனை எடுத்து இனியாவின் நம்பரை நோட் பண்ணிக் கொள்கிறார். பிறகு அங்கிருந்து கிளம்பி செல்கிறார். அடுத்து பழனிச்சாமி காரில் பாக்கிய சொன்ன வார்த்தையை நினைத்தபடி சிக்னலை மீறி காரை ஓட்டிச் செல்ல போலீஸ் அவரை தடுத்து நிறுத்துகிறது.
பைன் கட்ட சொல்ல பழனிச்சாமி அன்புக்கு விலை பேசாதீங்க சார், உங்களுக்கு இதெல்லாம் சொன்னா புரியாது என்று பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு இங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.
அடுத்த விமல் இனியாவுக்கு போன் போட்டு சிவகார்த்திகேயன் மேனேஜர் பேசுவதாக கலாய்க்கிறார். இனியா போலீசில் கம்பளைண்ட் கொடுத்திடுவேன் என்று கடுப்பாகி மிரட்ட எதிரே வந்து ஷாக் கொடுக்கிறார். நான் சொன்ன மாதிரி உன்னுடைய போன் நம்பர் கண்டு பிடிச்சிட்டேன். காலேஜையும் கண்டு பிடித்து விட்டேன் என்று பேசுகிறார்.
அடுத்து வீட்டில் எழில் மற்றும் அமிர்தா நிலா பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்க அமிர்தாவின் அம்மா வீட்டுக்கு வருகிறார். ஈஸ்வரி எழில் மற்றும் அமிர்தாவிடம் சரியாக பேசவில்லை அவர் கவனிக்கிறார். பிறகு அமிர்தா அம்மாவை கூட்டிட்டு போய் சாப்பிட வைக்கும் போது என் மாப்பிள்ளையோட பாட்டி உன்கிட்ட சரியா பேச மாட்றாங்க என்று கேட்காமல் குழந்தை விஷயம் பற்றி சொல்கிறார்.
நானும் அதே தான் சொல்றேன் நீ ஒரு குழந்தையை பெத்துக்க அப்பதான் உனக்கும் இந்த குடும்பத்திற்கும் ஒரு பிடிப்பு இருக்கும் என சொல்கிறார். பிறகு அமிர்தா அவர்தான் இப்போதைக்கு குழந்தை வேணான்னு சொல்றாரு எங்க செல்ல அமிர்தாவின் அம்மா ஈஸ்வரி பக்கத்தில் உட்கார்ந்து பேசும்போது ஈஸ்வரி குழந்தை விஷயம் பற்றி சொல்ல அமிர்தாவுக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருக்கு ஆனா மாப்பிள்ளை தான் இப்போதைக்கு வேணான்னு சொல்றாராம் என்று சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…