தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் பாக்கியா பற்றி பேசிக்கொண்டிருக்க பிறகு ராதிகா உள்ளே வந்ததும் பேச்சை நிறுத்தி விடுகின்றனர்.
அதைத்தொடர்ந்து கோபி ராதிகாவிடம் குடிக்க தண்ணீர் இருக்கா என்று கேட்க இல்ல வெளில இருக்கு என சொல்கிறார். இல்ல ரூம்ல இருக்கான்னு கேட்டேன் என்று சொல்ல ரூம்ல தான் இருக்கீங்க சுத்தி பாருங்க என்று பதில் கொடுக்க ஈஸ்வரி என்ன இது எது பேசிக்கிட்டு இருக்க என திட்ட திரும்பவும் ஒரு சண்டை வேண்டாம் நானே போய் எடுத்துக்கிறேன் என்று கிச்சனுக்கு வருகிறார்.
கிச்சனில் பாக்கியா இருக்க தண்ணீர் குடித்துக் கொண்டு கோபி அங்கிருந்து வெளியே செல்லும் போது இந்த வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் இங்கே தான் இருப்பேன் உன் முகத்தை உன்னை தனியா நிக்க வைப்பேன். எல்லாரையும் என் பக்கம் நிக்க வைப்பேன் என சவால் விட அதெல்லாம் நடக்கும்போது சேர்த்து வச்சு பேசுங்க இப்போதைக்கு கிளம்புங்க என்று பாக்கியா பதிலடி கொடுத்து அனுப்பி வைக்கிறார்.
அடுத்ததாக எழில் வாக்கிங் சென்று வரும் போது கணேஷ் பின் தொடர்ந்து வர எழில் திரும்பி பார்க்கும் போதெல்லாம் கணேஷ் மறைந்து கொள்கிறார். பிறகு ஆபீஸ்க்கு கிளம்பி இனியவை ட்ராப் செய்ய கிளம்பி வர சொல்ல செழியன் ஆபீஸ் போவதாகச் சொல்ல பாக்யா ஒரு நிமிஷம் என்று சொல்லி உள்ளே போய் லஞ்ச் பாக்ஸ் எடுத்து வந்து கொடுக்க இனியா பாக்யாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார்.
உங்க எல்லாரையும் விட எனக்கு தான் அம்மா மேல பாசம் அதிகம் என்று சொல்ல எனக்குத்தான் அதிகம் என்று சொல்லி பதிலுக்கு அவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க இதையெல்லாம் பார்த்த கோபி கடுப்பாகிறார். இனியா உட்பட யாரும் கோபியை கண்டு கொள்ளாமல் கிளம்பிச் செல்ல ஈஸ்வரி நீயும் இங்கு தான் இருக்க யாராவது சொல்லிவிட்டு போறாங்களா பாரு என கவலைப்படுகிறார்.
அடுத்து கோபி ரூமுக்குள் இருக்கும்போது ராதிகா வந்து சாப்பிட வாங்க என்று கூப்பிட கோபி கோபமாக எனக்கு ஒன்றும் வேண்டாம் என சொல்ல சரி சமைத்து வச்சிட்டேன் எப்ப பசிக்குதோ அப்ப சாப்பிடுங்க என்று கூறுகிறார். மதியத்துக்கு சமைக்க முடியல வெளியில பார்த்துக்கோங்க என்று சொல்ல ஈஸ்வரி அதைக்கூட உன்னால பண்ண முடியாதா என்று கேட்க இத சமைக்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, செய்ய முடியாது என பதிலடி கொடுக்கிறார். என் பையன கூட்டிட்டு வந்த எனக்கு அவனுக்கு சமைச்சு தர தெரியும் என்று சொல்ல அப்படியா சரி சமைச்சு கொடுங்க இனிமே நான் சமைக்கல என்று நோஸ்கட் கொடுத்து ஆபீஸ்க்கு கிளம்புகிறார்.
கோபியின் ஆபீஸ் கலந்த ஈஸ்வரி கடன் எல்லாம் கட்டி முடிச்சிட்டியா என்று கேட்க அதெல்லாம் கட்டிட்டேன் மா என்று பொய் சொல்லி வெளியே கிளம்ப பேங்கில் இருந்து ஆட்கள் வந்து கட்ட வேண்டிய பணத்தை இன்னும் மூன்றே நாளில் கட்ட வேண்டும் என ஆப்பு வைக்கின்றனர்.
பிறகு கோபி தமிழ் என் நண்பர் செந்திலை பார்த்து பிரச்சனை மேல பிரச்சனை முதல்ல பாக்கியாவால் பிரச்சனை, அடுத்து ராதிகாவால் பிரச்சினை இப்பொழுது இரண்டு பேரும் என் தலை மேல ஏறி உக்காந்துகிட்டு பிரச்சனை பண்றாங்க என்று புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…
Kaadana Kaadu Lyrical Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika | Riythvika…
Mittai Mazhai Lyrical Video | AOT | Dulquer Salmaan | Satvika | GV Prakash |…
Street Fighter Official Tamil Trailer | In Cinemas October 16
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash