தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து மீனாவை சண்டை நடந்த பார்க்குக்கு கூட்டிச்சென்று மீனா தூக்கி அடித்த செங்கலை எடுத்து இது சாதனையாளருக்கு கொடுத்த கோப்பை மாதிரி என்று சொல்லி வீட்டிற்கு எடுத்து போகலாம் என எடுத்து வருகிறார்.
இங்கே வீட்டில் ரோகினி மற்றும் மனோஜ் விஜயாவிடம் முத்துவை போல மீனாவும் அடிதடி இறங்கிட்டாங்க, இரண்டு பேரும் சேர்ந்து ரவுடி கம்பெனி ஸ்டார்ட் பண்ணிட போறாங்க என்று உசுப்பேத்திவிட மீனா வீட்டிற்குள் வருகிறார். பின்னாடியே வரும் முத்து மீனா எங்க போயிட்டு வந்தானே ஏதாவது கேட்கணுமா என்று கேட்க கையில் செங்கலை பார்த்து விஜயா பயப்படுகிறார்.
ரோகினி மற்றும் மனோஜிடம் உங்களுக்கு ஏதாவது கேட்கணுமா என்று கேட்க அவர்கள் பயப்படுகின்றனர். பிறகு அண்ணாமலை வந்து மீனாவின் தைரியத்தை பாராட்டுகிறார். இதை பார்த்து விஜயா கடுப்பாகிறார். அடுத்து முத்து அந்தச் செங்கலை கொண்டு வந்து ரூமில் வைத்து இது இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லி வெளியே கிளம்புகிறார்.
மறுபக்கம் வாசுதேவன் மனைவி அந்த அண்ணாமலையும் விஜயாவையும் பழி தீர்க்க சுருதியே அந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கணும். அவன் புள்ளைய அவன் கிட்ட இருந்து பிரிச்சு நடுரோட்டில் நிற்க விடணும் என தன்னுடைய திட்டத்தை சொல்லி வாசுதேவனை அண்ணாமலை வீட்டிற்கு அழைக்க அவர் வர மறுக்கிறார்.
அதன் பிறகு வாசுதேவன் மனைவி விஜயாவுக்கு போன் போட்டு நாளைக்கு நல்ல நாள் தான். என் பொண்ணையும் உங்க பையனையும் கூட்டிட்டு வந்து விடுகிறோம் என்று சொல்ல விஜயா எல்லா சாமியையும் கும்பிட்டு நன்றி கூறி சந்தோஷப்படுகிறார். ஆனா நாங்க வரும்போது உங்க பையன் முத்து அங்க இருக்க கூடாது என கண்டிஷன் போட வேறு வழி இல்லாமல் விஜயாவும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
அடுத்ததாக வீட்டுக்கு வந்த முத்து ரூமுக்குள் வைத்த செங்கலை தொட்டு கும்பிட்டு அதற்கு பூ வைத்து சாமி கும்பிட நீ நான் என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல நான் உன்னை அறிந்த போது ஏன் நீ என்னை திருப்பி அடிக்கல என்று கேட்க மீனா வேற யாராவது நான் அடிச்சிருக்கு என்ன பண்றது புருஷனா போயிட்டீங்க என்று தலகாணியை எடுத்து தட்ட முத்து பயப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…
Kaadana Kaadu Lyrical Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika | Riythvika…
Mittai Mazhai Lyrical Video | AOT | Dulquer Salmaan | Satvika | GV Prakash |…
Street Fighter Official Tamil Trailer | In Cinemas October 16
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash