இனியாவின் பேச்சால் சந்தோஷத்தில் பாக்கியா. கோபிக்கு காத்திருந்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மேடை ஏறிய இனியா மேடம் கொடுத்த மைக் வாங்கி நான் இந்த இடத்தில் நிற்க காரணம் என்னுடைய அம்மா தான். ஆரம்பத்தில் நான் அவங்க ஸ்கூலுக்கு கூட்டிட்டு வரவே யோசிப்பேன். அவங்களுக்கு யார்கிட்டயும் பேச தெரியாது பழக்கத் தெரியாது என நானே அவங்கள திட்டுவேன்.

ஆனா இன்னைக்கு எங்க அம்மா ஒரு பிசினஸ் ரன் பண்றாங்க, 40 வயசா இது இப்பவும் கிளாஸ் போய் புதுசு புதுசா கத்துக்கிறாங்க. என்னுடைய இன்ஸ்பிரேஷனா இருக்காங்க. எங்கம்மா படிப்ப பத்தி சொல்லி சொல்லி எனக்கு படிப்பு மேல ஆர்வம் அதிகமாகி ஆவரேஜ் ஸ்டுடென்ட்டா இருந்த நான் இன்னைக்கு இங்க வந்து நிற்கிறேன். இது எல்லாத்துக்கும் காரணம் எங்க அம்மா தான் ஐ லவ் யூ மா என்று பேச பாக்கியா கண்கலங்கி சந்தோஷப்படுகிறார்.

அதன் பிறகு இனியா கீழ இறங்கி வந்ததும் பாக்யா கட்டிப்பிடித்து அன்பை பரிமாற இதையெல்லாம் பார்த்து கோபி சந்தோஷப்பட்ட அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இந்த சமயம் ராதிகா மயூவை ஸ்கூலுக்கு அழைத்து வந்திருக்க ஒரு கட்டத்தில் கோபியின் காரை பார்த்து விடுகிறார்.

பிறகு கோபியையும் பார்த்துவிட அவர் மயூவை பார்க்கத்தான் வந்ததாக சொல்லி சமாளிக்க இந்த சமயம் பார்த்து ஒருவர் வந்து சூப்பரா பேசணும் நீங்க வரலன்னு நினைச்சேன் ஆனா வந்து இருக்கீங்க என கோர்த்துவிட்டுப் போக ராதிகா கடுப்பாகிறார். வாயை திறந்தாலே பொய் பொய் என ராதிகா சத்தம் போட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க கோபி எதுவாக இருந்தாலும் காரில் போய் பேசிக்கலாம் என காருக்குள் உட்கார வைக்கிறார்.

மறுபக்கம் பாக்கியா ஓரிடத்தில் உட்கார்ந்து இனியா வாங்கிய மெடலை வைத்துக் கொண்டு ஆசையாக பார்த்து சந்தோஷப்படுகிறார். எழில் அங்கு வர பாக்கியா மெடலை பார்த்து கண் கலங்கி சந்தோஷப்பட எழில் மற்றும் பாக்யா இருவரும் இனியா பேசியதை பற்றி சந்தோஷமாக பேசுகின்றனர். அதன் பிறகு இருவரும் ஐஸ் கிரீம் சாப்பிட கிளம்பிச் செல்கின்றனர்.

மறுபக்கம் ராதிகா கோபியை சத்தம் போட்டு காருக்குள் வர சொல்லி இங்கே எதற்கு வந்தீங்க என கேட்டு உங்கள பாத்தா கோபம் கோபமா வருது என முகத்தில் ஒரு குத்து விடுகிறார். பிறகு கோபி இனியா இந்த ஸ்கூல்லையே கிரேட் ஸ்டுடென்ட் அவார்ட் வாங்கினா ரொம்ப சந்தோஷமா இருந்தது என முகத்தில் பிரகாசத்தோடு சொல்ல ராதிகா உங்க பொண்ண பத்தி சொல்லும்போது உங்க முகத்துல அவ்வளவு பிரகாசம் தெரியுது என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

ஜேசன் சஞ்சய்-முதல்வர் விஜய் வைரல் வீடியோ: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ஜேசன் சஞ்சய் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது வெளியாகியுள்ள ஒரு…

2 hours ago

பாடகி சின்மயி கணவர் எக்ஸ் தளத்தில் இருந்து விலகல்!

பாடகி Chinmayi Sripaada-யின் கணவரும் திரைப்பட இயக்குநருமான Rahul Ravindran, தனது குழந்தைகளுக்கு வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து எக்ஸ்…

2 hours ago

“சிக்மா” டப்பிங் BTS புகைப்படங்கள் வெளியீடு

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் BTS புகைப்படங்கள் தற்போது…

2 hours ago

லோகேஷ் கனகராஜின் ‛டிசி, ஜூலை 31ல் ரிலீஸ்

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை…

3 hours ago

இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர் 2’ அப்டேட்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த…

6 hours ago

Kattazhagi Video Song

Kattazhagi Video Song | Idhayam Murali | Atharvaa | Thaman S | Kayadu Lohar |…

7 hours ago