Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இனியாவை திட்டிய ராதிகா. கோபி மீது கோபத்தில் இனியா. இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா சரணுடன் வெளியே சாப்பிட போயிருந்த நிலையில் ராதிகாவிடம் வசமாக சிக்குகிறார்.

ராதிகா கடையில் வைத்து இனியாவிடம் சத்தம் போட்டு இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டுக்கு வரவேண்டும் என சொல்ல பிறகு சரணும் இனியாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். வீட்டுக்கு வந்த இனியா ராதிகாவிடம் கடையில வைத்து அப்படி சத்தம் போடறீங்க என கோபப்பட நீ பண்ணது தப்பு அதை கேட்க தான் செய்வேன் என நீ இந்த வீட்ல இருக்க என ராதிகா கோபப்படுகிறார்.

உடனே இனியா என்னை கண்ட்ரோல் பண்றதுக்கு நீங்க யாரு? என்ன எனக்கு அம்மாவாக ட்ரை பண்றீங்களா? அதெல்லாம் ஒரு நாளும் நடக்காது என ஷாக் கொடுக்கிறார். நான் மயூவா இருந்தா என்ன பண்ணுவானோ அதையே தான் உனக்கு பண்றேன் என சொல்ல அதை மயூ கிட்ட பண்ணுங்க என இனியா மீண்டும் பதிலடி கொடுக்க கோபி வரட்டும், அவரே நான் செஞ்சது தப்பா இல்லையான்னு சொல்லட்டும் என ராதிகா சொல்ல இனியா நானும் டாடி கிட்ட சொல்றேன் அவர் யாருக்கு சப்போர்ட் பண்ணுகிறார் என்று பார்க்கலாம் என சொல்கிறாள்.

பிறகு ராதிகா கோபிக்கு போன் போட்டு உடனடியாக வீட்டுக்கு வர சொல்ல கோபியும் வரேன்னு என சொல்லி ஃபோனை வைக்கிறார். மறுபக்கம் எழில், நிலா பாப்பாவுக்கு டிரஸ் எடுத்து வந்து அமிர்தாவிடம் கொடுத்து இன்னும் இரண்டு நாளில் அவளுக்கு மூன்றாவது பிறந்தநாள் அதை பெருசா செலபிரேட் பண்ணனும் என சொல்ல அமிர்தா இப்போதைக்கு அதெல்லாம் வேண்டாம் அடுத்த வருஷம் பார்த்துக்கலாம் என சொல்கிறார்.

பிறகு கோபி வந்ததும் ராதிகா இனியா செய்த விஷயத்தை சொல்ல இனியா அவன் என்னுடைய பிரண்டு அது எல்லோருக்கும் தெரியும். தாத்தா பாட்டி அம்மா என எல்லோருக்கும் தெரியும் என சொல்கிறார். மேலும் இவங்க எப்படி என்னை ரோட்டில் வைத்து சத்தம் போடலாம் என இனியா கேட்க கோபி அவ அம்மா ஸ்தானத்துல இருந்து கேட்கிறா, நீ கோபப்படாத என சொல்ல இவங்களுக்கு அந்த உரிமை எல்லாம் கிடையாது என இனியா சொல்கிறாள். பிறகு கோபி நீ எதுக்கு யாரோ ஒருத்தனுடன் வெளியில் நின்னு பேசுற என கேட்க நீங்களும் என்னை நம்பலல அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணி பேசுறிங்க என கோபப்பட்டு மொட்டை மாடிக்கு செல்கிறார்.

அடுத்து ராதிகா அவகிட்ட சொல்லி வையுங்க ரொம்ப திமிரா பேசிகிட்டு இருக்கா நான் சும்மா இருக்க மாட்டேன். என்கிட்ட வந்து எதுவும் கேட்காதீங்க என சொல்லி கிளம்ப கோபி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update