எழில் சொன்ன வார்த்தை.கோபத்தில் ஈஸ்வரி எடுத்த முடிவு.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனிக்கு உதவி செய்ய சொல்ல அதனால் கடுப்பான செழியன் சண்டை போட ஈஸ்வரி பாக்கியா, ஈஸ்வரி என இருவரும் வந்துவிட அப்பா இந்த வீட்டை விக்கிறனு சொன்னாரு அதுக்கு நான் என்ன பண்ணனும்? நானா எழில வீட்ட வாங்கிக்கிறேன் வாக்கு கொடுக்க சொன்னேன்? நீங்க பண்ற தப்புக்கு நான் என்ன பண்ண முடியும் என கோபப்பட்டு சென்று விட்ட பாக்கியா நீ எதுக்கு அவன் கிட்ட இதையெல்லாம் கேக்குற என ஜெனியை திட்டுகிறார்.

அடுத்து எழில் தயாரிப்பாளர் பார்க்க வர அவர் இந்த கதையை இனி நான் படம் பண்ண மாட்டேன் என சொல்லி உன்னுடைய பழைய தயாரிப்பாளரிடம் ஒரு லெட்டர் வாங்கிட்டு வா நான் இந்த கதையை வாங்கிக்கிறேன் என சொல்ல எழில் தயாரிப்பாளரை பார்க்க செல்கிறார். அவர் வேண்டுமென்ற எழிலை காக்க வைத்து பிறகு வர்ஷினி சொன்னதால் உள்ளே வரவைத்து பேச எழில் இந்த கதையை நான் வேற ஒருத்தருக்கு விற்கப் போகிறேன் அதுக்காக நீங்க ஒரு லெட்டர் தரணும் என கேட்கிறான்.

உடனே தயாரிப்பாளர் எதுக்கு இந்த கதையை நீ வேற ஒருத்தருக்கு விற்கணும் நானே வச்சிக்கிறேன், நீயே இந்த படத்தை டைரக்ட் பண்ணு, உனக்கு எவ்வளவு பணம் தேவைப்படுதோ நான் கொடுக்கிறேன் அதை இந்த படத்தோட சம்பளமா வச்சுக்கோ என சொல்ல எழில் அதற்கு நான் என்ன பண்ணனும் என கேட்கிறார்.

உடனே தயாரிப்பாளர் வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கோ என சொல்ல அது முடியவே முடியாது, அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்கிறேன். நான் ஏற்கனவே வேற பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாக்கு கொடுத்து இருக்கேன், அவங்க எனக்காக காத்துட்டு இருக்காங்க என சொல்ல அப்போ இந்த கதையை நீ யாருக்கும் வைக்க முடியாது உனக்கு எப்போ அட்வான்ஸ் கொடுத்து அப்பவே இது என்னுடைய கதை என அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதன் பிறகு எழில் வீட்டுக்கு வர செழியன் பணம் கிடைத்து விட்டதா என கேட்க முடியல என எழில் சொல்கிறார். உடனே ஈஸ்வரி எப்ப தந்தது பொய் சொல்ல ஆரம்பித்த என நடந்த விஷயங்களை சொல்ல இதெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது என எழில் கேட்க வர்ஷினி தான் சொன்னதாக சொல்கிறார். அவதான் உனக்கு தேவையான பணத்தை படத்தை நீயே பண்ணுன்னு சொன்னார் இல்ல அப்புறம் உனக்கு என்ன பிரச்சனை என கேட்க அவர் கேட்கிறதெல்லாம் செய்ய முடியாது என சொல்கிறார்.

மேலும் அப்படி என்ன கேட்டாரு என கேட்க வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க பண்ணாரு என சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். ஈஸ்வரி சரி அவ்வளவு தானே பண்ணிக்க வேண்டியது தானே என சொல்ல, எழில் என்னால முடியாது என சொல்ல ஏன் முடியாது என ஈஸ்வரி கேட்கிறார்.

ஆவேசத்துடன் நான் அமிர்தாவை காதலிக்கிறேன் அவ்வளவு தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். யாரைக் கேட்டு இப்படி ஒரு முடிவெடுத்த? நான் உயிரோட இருக்கும் வரை அது நடக்காது என ஈஸ்வரி பதிலடி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…

6 hours ago

“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்” – நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன?

"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…

6 hours ago

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா?

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…

6 hours ago

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…

6 hours ago

முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்..

முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…

7 hours ago

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…

23 hours ago