Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?

Atharva Murali plays two roles in 'Valai'...do you know what the story is?

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?

அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’ என்று தலைப்பு வைத்துள்​ளனர். இதை ஜீவா சங்​கர் ஒளிப்​ப​திவு செய்து இயக்​கி​யுள்​ளார். இவர், ‘நான்’, ‘அமர காவி​யம்’ போன்ற படங்​களை இயக்​கிய​வர்.

ரூபா மஞ்​சரி, வாணி போஜன், முரளி சர்​மா, ஆடு​களம் நரேன், அர்​ஜாய் உள்பட பலர் நடித்​துள்​ளனர். ராது இன்ஃ​போ டெ​யின்​மென்ட் சார்​பில் பெப்சி வி.எஸ்​.​பால​முரளி தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு ஜிப்​ரான் இசை அமைத்​துள்​ளார். படம் பற்றி ஜீவா சங்​கர் கூறும்​போது,

‘ராமேஸ்​வரம் பின்னணியில் இப்​படம் உரு​வாகியுள்​ளது. சரா மற்​றும் குட்டி என 2 கதா​பாத்​திரங்​களைச் சுற்றி இப்​படத்​தின் கதை நகர்​கிறது. அந்த 2 கதா​பாத்​திரங்​களி​லும் அதர்வா முரளி நடித்​துள்​ளார். மீனவர் சமூகத்​தின் வாழ்க்​கையை பேசும் இப்​படம், பழி​வாங்​கும் கதை​யாக உரு​வாக்​கப் பட்​டுள்​ளது. படப்​பிடிப்பு முடிந்​து, போஸ்ட் புரொடக்சன் பணி​கள் இறு​திக் ​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது’ என தெரிவித்துள்ளார்.

இச்சூழலில் சூரி நடிப்பில் ‘மண்டாடி’ படம் உருவாகி, விரைவில் வெளியாகவுள்ளது. இப்படம் கடலும் கடல் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் கதைக்களம் மீனவர்கள் பற்றியது என கூறப்படுகிறது.

Atharva Murali plays two roles in 'Valai'...do you know what the story is?
Atharva Murali plays two roles in ‘Valai’…do you know what the story is?