Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன்!”- செல்வராகவனின் பதிவு

"Are you all God? How much I have worshipped you!" - Selvaraghavan's post

“நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன்!”- செல்வராகவனின் பதிவு

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது, மெண்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி-2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். நடிகராகவும் கமிட் ஆகி வருகிறார்.

இவருக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து, செல்வராகவன் அவரது உதவி இயக்குநர் கீதாஞ்சலியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கீதாஞ்சலி ‘மாலை நேரத்து மயக்கம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு, தன் கணவர் செல்வராகவனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாவிலிருந்து கீதாஞ்சலி நீக்கியுள்ளார். இவர்கள் விரைவில் விவாகரத்து செய்ய போகிறார்களா எனவும் சில தினங்களாக இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில், செல்வராகவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு வைரல் ஆகி இருக்கிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

‘திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள். அப்போது அமைதியாய் இருங்கள். சில காலம்தான். பெரும் மலை, பனியாய் போகும். அனைத்தும் சரியாகி விடும்.’ என சூகமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு யாருக்கானது எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

"Are you all God? How much I have worshipped you!" - Selvaraghavan's post
“Are you all God? How much I have worshipped you!” – Selvaraghavan’s post