தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா, கஜினி, ஏழாம் அறிவு, கத்தி, துப்பாக்கி, போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்ற படத்தையும் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது அவரது புதிய படத்திற்கான அப்டேட் ஒன்று கூறியுள்ளார்.
அதாவது எனது அடுத்த படத்தில் ஒரு குரங்கை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அதாவது கிராபிக்ஸில் உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த யோசனை நான் உதவிய இயக்குனராக பணிபுரிந்த காலத்தில் இருந்தே இருந்ததாகவும் கூறியிருக்கிறார் இதைத்தான் முதல் படமாக எடுக்க நினைத்தேன் என்றும் தெரிவித்துள்ளார் இந்த படம் முக்கியமாக குழந்தைகளுக்கு ஒரு இலக்காக கொண்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


