நடிகர் விஜய் இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளார். வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்தார்.விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர், நடிகர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு @actorvijay அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி… https://t.co/oYP8IfDyxn
— K.Annamalai (@annamalai_k) February 2, 2024