Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அனிமல் படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா.

animal-movie-ott-update viral

“பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அனிமல்’. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘அனிமல்’ திரைப்படத்தின் ஒலி தரத்திற்காக 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இப்படம் ஓடிடியில் வெளியாகும் போது அந்த காட்சிகள் இணைக்கப்படும் என்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘அனிமல்’ திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் உள்ள நிலையில் கூடுதலாக 8 நிமிடங்கள் சேர்க்கப்பட்டால் 3 மணிநேரம் 30 நிமிடம் ரன்னிங் டைம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படம் ஜனவரியில் ஓடிடி-யில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.”

animal-movie-ott-update viral
animal-movie-ott-update viral